தேவைப்பட்டால் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம். பாக்.பிரதமர்

  • IndiaGlitz, [Thursday,September 21 2017]

வடகொரியா மட்டுமே கடந்த சில வருடங்களாக அணு ஆயுத தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா உள்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் அப்பாஸி தங்களிடம் குறுகிய தூரம் சென்று தாக்கும் அணு ஆயுதம் தயாராக இருப்பதாகவும், தேவைப்பட்டால் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம்' என்றும் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான கவுன்சில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியபோது, 'வடகொரியாவுக்கு பாகிஸ்தான் அணு ரகசியங்களை விற்கிறது என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் அப்பாஸி, 'இந்தியா தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் அதன் மீது அணு ஆயுதங்களை பிரயோகப்படுத்த தயங்க போவதில்லை என்று பேசினார். இந்த பேச்சில் இருந்து சுஷ்மா ஸ்வராஜின் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 

More News

கொல்கத்தா போலீசாரை வியக்க வைத்த தோனி

தல தோனி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தின் அருகே இருந்த காவல்துறையின் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு காவல்துறையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தனர்.

சாண்டி டைவர்ஸ் செய்ய என்னோட டார்ச்சர்தான் காரணம்: காஜல்

பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஒருவராகிய காஜல், பிரபல டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முன்னாள் மனைவி என்பது அனைவரும் தெரிந்ததே. இவர்களது விவாகரத்துக்கு காரணம் என்ன

இந்தியாவில் முதல்முறையாக பயோமெட்ரிக் சிஸ்டம்: ஐதராபாத் விமான நிலையத்தில் தொடக்கம்

விமானத்தில் பயணம் செய்ய வேண்டுமானால் விமானம் கிளம்புவதற்கு ஒருசில மணி நேரங்களுக்கு முன்பே விமான நிலையம் சென்று உடமைக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு முத்திரை மற்றும் போர்டிங் பாஸ் பெற வேண்டும்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிரடி சலுகை: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிர்ச்சி

இந்திய தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சமீபத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. ரூ.309க்கு தினசரி 1GB டேட்டா மற்றும் எண்ணிலடங்கா இலவச அழைப்புகள் என சலுகை

வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்களுக்கு 10 நாள் சம்பளம் கட்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி

சமீபத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் செய்த வேலை நிறுத்ததம் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் சரியாக இயங்கவில்லை