திடீரென டிவிட்டரில் அதிகளவு ட்ரோல் ஆகும் பிரதமர்… காரணம் தெரியுமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று முதல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டிவிட்டரில் அதிகளவு ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இதற்குக் காரணம் கடந்த சில தினங்களாக தனது 12.9 மில்லியன் ஃபாலோர்வர்களை அவர் அன்ஃபாலோ செய்திருக்கிறார். இதற்காக இம்ரான்கான் “முன்னாள் பிரதமர் நவாப் ஷெரீப்பைவிட மோசமானவர்” என ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார் என்ற தகவலை ஏஎன்ஐ செய்தியாக வெளியிட்டு இருக்கிறது.
ஒரு நாட்டின் பிரதமர் இப்படி திடீரென தனது ஃபாலோவர்களை அன்ஃபாலோ செய்வது கடும் பதட்டத்தை உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு சமூக வலைத்தளத்தின் அடிப்படை நோக்கம் மக்களை மற்றவர்களுடன் இணைப்பில் வைத்திருப்பதுதான். இந்நிலையில் ஒரு பிரதமரே தனது டிவிட்டரில் நண்பர்களாக உள்ள அனைவரையும் அன்ஃபாலோ செய்திருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது முதல் மனைவியும் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வரும் ஜெமிமா கோல்ட்ஸ்மித்தை அன்ஃபாலோ செய்தார். அதற்கான காரணத்தை குறிப்பிட்ட அவர் ஜெமிமா என்ன செய்கிறார் என்பதை பார்க்க விரும்பவில்லை எனத் தெரிவித்து இருந்தார். ஜெமிமாவை விவகாரத்து செய்த பின்பு 2 திருமணங்களை அவர் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது. இந்நிலையல் தனது டிவிட்டர் கணக்கைத் தொடர்ந்து ஃபாலோ செய்து வந்த 12.9 மில்லியன் கணக்காளர்களையும் அவர் அன்ஃபாலோ செய்திருக்கிறார். இதற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாக வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Prime Minister Imran Khan unfollows everyone on twitter
— Haseeb Balouch (@HaseebBalouch9) December 8, 2020
no one anymore pic.twitter.com/fOqwbv6DoQ
#Pakistan PM Imran Khan unfollows everyone from Twitter pic.twitter.com/x2qBXn4W8u
— An Individual (@GlobalAnalyzer) December 7, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com