கேட்சை விட்டதால் கன்னத்தில் பளார் விட்ட பவுலர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாகிஸ்தான் நாட்டில் சூப்பர் லீக் டி20 போட்டிகளின்போது நடைபெற்ற ஒரு சம்பவம் இணையத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டில் சூப்பர் லீக் டி20 போட்டித்தொடர் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கொண்ட இந்தத் தொடரில் 30 லீக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் நேற்று பெஷாவர் மற்றும் லாகூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பீல்டிங் வீரர் ஒருவர் கேட்சை தவறவிட்டதால் அந்த அணியின் பவுலர் அவரை கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெஷாவர் அணி பேட்டிங்கில் ஈடுபட்டது. இதையடுத்து லாகூர் அணி வீரர்கள் பந்து வீச்சில் ஈடுபட்டனர். அப்படி அந்த அணியின் வீரர் ஹரிஷ் ரவூப் பந்துவீசியபோது பெஷாவர் அணியின் பேட்ஸ்மேண் ஹசரத்துல் சாசாய் சிக்ஸர் அடிக்க முயன்றார். ஆனால் அது லெக் சைட்டில் போய் பீல்டிங்கில் ஈடுபட்டு இருந்த கம்ரான் குலாப் கைகளுக்கு கேட்சாக சென்றது. ஆனால் போட்டிக்களத்தில் கடுமையான பனி பெய்த நிலையில் கம்ரான் அதைத் தவறவிட்டார்.
இதையடுத்து கடும் கோபமடைந்த பவுலர் ஹரிஷ் ரவூப் தொடர்ந்து பந்துவீசி அதே ஓவரில் மற்றொரு விக்கெட்டை வீழ்த்தினார். இதை லாகூர் அணி வீரர்கள் கொண்டாடினர். அந்த நேரத்தில் கேட்சை தவறவிட்ட கம்ரானும் ரவூப்பை பாராட்டுவதற்காக அருகே ஓடினார். ஆனால் ஏற்கனவே கோபத்தில் இருந்த ரவூப் கம்ரானின் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டார். இதையருகில் இருந்த வீரர்கள் அதிர்ச்சியோடு பார்த்தனர். ஆனால் ரவூப்பின் அணுகுமுறையை கொஞ்சமும் பொருட்படுத்தாத கமரான் ரவூப்பை தட்டித் தழுவிக்கொண்டார். இந்தக் காட்சி இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
நேற்றைய போட்டியில் பெஷாவர் அணி 7 விக்கெட்டுகளுக்கு 158 ரன்கள் எடுத்த நிலையில் லாகூர் அணியும் 120 ஓவர்களுக்கு 58 ரன்களை எடுத்ததால் சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது. அந்த ஓவரில் பெஷாவர் 8 ரன்களை எடுத்து முன்னணியில் இருந்தபோது லாகூர் 5 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
Wreck-it-Rauf gets Haris! #HBLPSL7 l #LevelHai l #LQvPZ pic.twitter.com/wwczV5GliZ
— PakistanSuperLeague (@thePSLt20) February 21, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments