நட்புக்கரம் நீட்டிக்கொண்டே டிக் டாக்கிற்கு முடிவுக்கட்டிய பாகிஸ்தான்… தெறிக்கவிடும் பின்னணி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒழுக்கக் கேடான மற்றும் அநாகரிகமான வீடியோக்கள் வெளியிடுப்படுவதாகக் கூறி பாகிஸ்தான் அரசாங்கம் நேற்று டிக் டாக் செயலிக்கு தடை விதித்து இருக்கிறது. சீன நிறுவனமான டிக் டாக்கிற்கு பாகிஸ்தான் தடை விதித்து இருப்பது குறித்து பலரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
காரணம் கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாகவும் மற்றும் பொருளாதார ரீதியிலான காரணங்களுக்கு சீனாவை எதிர் நோக்கும் நாடாகவும் இருந்து வரும் பாகிஸ்தான் முதன்முறையாக டிக் டாக் செயலிக்குத் தடை விதித்து சீனாவிற்கு எதிரான காரியத்தை செய்து இருக்கிறது. இந்தப் பின்னணியின் நோக்கம் என்ன என்பது போன்ற விவாததத்தை தற்போது ஊடகங்கள் கையில் எடுத்து இருக்கின்றன.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் கடந்த மே மாதம் முதல் ஆரம்பித்த லடாக் எல்லைப் பிரச்சனைக் காரணமாக இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. மேலும் இருநாட்டு இராணுவங்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே கல்வான் பகுதியில் இந்திய இராணுவத்தினர் மீது சீன இராணுவம் தாக்குதலைத் தொடுத்து அதன் காரணமாக இந்தியாவின் 20 இராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் கடும் கோபமடைந்த மத்திய அரசு சீனாவின் உதிரிபாக பொருட்களுக்கு இறக்குமதி மற்றும் சில எலக்ட்ரானிக் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்தது. அதையடுத்து சீனாவின் 54 செயலிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இயக்கப்படுவதாகக் கூறி மத்திய அரசு தடை விதித்தது. அதில் டிக் டாக் செயலியும் ஒன்று. மேலும் பல சீனச் செயலிகளும் இந்தியாவில் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டன.
இந்தியாவின் இத்தகைய நடவடிக்கைகளை அடுத்து அமெரிக்காவும் சீன பொருட்களின் இறக்குமதிக்கு கெடுபிடிக் காட்டியதோடு மேலும் டிக் டாக் செயலிக்கு அந்நாட்டில் தடை விதித்து உத்தரவிட்டது. அதைப்போலவே தற்போது பாகிஸ்தானும் செயல்பட முற்படுகிறதா என்பது போன்ற கேள்விகள் முன்வைக்கப்படும் நிலையில் டிக் டாக் செயலியில் ஆபாச படம் வெளியிடப்படுவதால் இந்நடவடிக்கை தொடருவதாக அந்நாட்டு அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்ட பாகிஸ்தான், டிக் டாக் செயலியில் அநாகரிகமான பதிவுகள் அதிகரித்து வருவதாகவும் ஒழுக்கக் கேடான மற்றும் அநாகரிகமான வீடியோக்கள் வெளியாவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறது. இதனால் அந்நாட்டின் தொலைத்தொடர்பு ஆணையம் டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பதாகவும் அதிகாரப் பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout