திடீரென கல் குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவு- 22 தொழிலாளர்கள் உயிரிழந்த பரிதாபம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த கல்குவாரி ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாறை சரிவினால் இதுவரை 22 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் மாகாணத்தில் பக்துஸ்மா எனும் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பளிங்கு கல் குவாரியில் இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
பளிங்கு கல் குவாரியில் வழக்கம் போல நேற்றும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென அங்கிருந்த பெரிய பாறை ஒன்று சரிந்து விழுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 22 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்றும் மேலும் இதில் 15-20 பேர் சிக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் தீவிர மீட்புப்பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்பதற்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இந்த விபத்தினால் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்றும் உள்ளூர் அதிகாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout