திடீரென கல் குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவு- 22 தொழிலாளர்கள் உயிரிழந்த பரிதாபம்!!!

  • IndiaGlitz, [Wednesday,September 09 2020]

 

பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த கல்குவாரி ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாறை சரிவினால் இதுவரை 22 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் மாகாணத்தில் பக்துஸ்மா  எனும் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பளிங்கு கல் குவாரியில் இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

பளிங்கு கல் குவாரியில் வழக்கம் போல நேற்றும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென அங்கிருந்த பெரிய பாறை ஒன்று சரிந்து விழுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 22 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்றும் மேலும் இதில் 15-20 பேர் சிக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் தீவிர மீட்புப்பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்பதற்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இந்த விபத்தினால் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்றும் உள்ளூர் அதிகாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர். 

More News

6 பந்தில் 6 பவுலர்களை நகல் எடுக்கும் பும்ரா!!! அசத்தல் வீடியோ!!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கான இறுதிகட்ட பயிற்சியில் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

எல்லையில் கத்திக் கம்புகளுடன் நிற்கும் சீன இராணுவ வீரர்கள்!!! கதிகலங்க வைக்கும் பின்னணி!!!

கடந்த சில தினங்களுக்கு கிழக்கு லடாக் பகுதியில் சீன இராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்தியா

பாஜகவில் சிவகார்த்திகேயன்? காயத்ரி ரகுராம் அதிரடி தகவல் 

கோலிவுட் திரையுலகில் ஏற்கனவே பல நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என ஒரு பட்டாளமே பாஜகவில் இணைந்து வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும்

கொரோனா சிகிச்சைக்கு 2,000 மினி மருத்துவமனைகள்- தமிழக முதல்வரின் அடுத்த அதிரடி!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகத் தமிழக அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

கொரோனா காலத்தில் ரூபாய் நோட்டைப் பார்த்து பயந்து ஓடும் வணிகர்கள்!!! அச்சமூட்டும் காரணங்கள்!!!

கொரோனா வைரஸ் பொருட்களின்மீது நாள் கணக்கில் தங்கியிருக்கும் என்ற தகவலை விஞ்ஞானிகள் முன்பே அறிவுறுத்தி இருந்தனர்.