டயாபடிக் நோயாளிகளும் இனி மாம்பழம் சாப்பிடலாம்… சுவீட் இல்லாத புது வரவு!

  • IndiaGlitz, [Saturday,June 26 2021]

பொதுவாக நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அதிகம் உள்ள எந்தப் பொருளையும் சாப்பிட முடியாமல் ஏங்குவதைப் பார்த்து இருப்போம். அந்த வகையில் அவர்களால் மாம்பழத்தையும் ருசி பார்க்க முடியாத நிலைமை இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மாம்பழ சீசன் என்பதால் பார்க்கும் இடங்களெல்லாம் மாம்பழங்களே குவிந்து இருக்கின்றன. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு என பிரத்யேகமாக மாம்பழங்களை பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் அறிமுகம் செய்துள்ளார்.

சிந்து பகுதியில் உள்ள எம்.ஹெச் எனும் பண்ணையை வைத்து இருக்கும் குலாம் சர்வார் என்பவர் புதிதாக 3 வகை மாம்பழங்களை உருவாக்கி இருக்கிறார். இந்த மாம்பழங்களில் சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும் எனக் கூறியுள்ளார். தற்போது அனைவராலும் விரும்பி உண்ணப்படும் சிந்தூரி, சவுன்ஸ் வகை மாம்பழங்களில் 12-15% சர்க்கரையின் அளவு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் குல்சார் உருவாக்கியுள்ள சோனாரோ, கிளென், கீட் வகை மாம்பழங்களில் 5%க்கும் குறைவாக சர்க்கரையின் அளவு இருக்கிறது. அதிலும் கீட் மாம்பழத்தில் 4.7% மட்டுமே காணப்படுகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் புதுவகை மாம்பழங்களை வாங்கி உண்ணும்படி குலாம் சர்வார் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அனைவருக்கும் பலன் அளிக்கும்படி இந்த மாம்பழங்களை அவர் ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.