காஷ்மீரை அடுத்து ஐபிஎல் குறித்து அஃப்ரிடியின் சர்ச்சை கருத்து
- IndiaGlitz, [Friday,April 06 2018]
சமீபத்தில் காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி தெரிவித்தார். அஃப்ரிடியின் இந்த கருத்துக்கு இந்திய வீரர்களான கபில்தேவ், சச்சின், கவுதம் காம்பீர் , ரெய்னா உள்பட பலர் பதிலடி கொடுத்தனர்.
இதனால் கப்சிப்பான அஃப்ரிடி தற்போது ஐபிஎல் போட்டி குறித்தும் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அஃப்ரிடி கூறியதாவது: இப்போது ஐபிஎல் போட்டியில் விளையாட என்னை அழைத்தால் நான் செல்ல மாட்டேன். எனக்கு எங்கள் நாட்டில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி தான் முக்கியம். எதிர்காலத்தில் ஐபிஎல் போட்டியை விட எங்கள் பிஎஸ்எல் முன்னுக்கு வரும் என்று கூறியுள்ளார்
கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் அஃப்ரிடி, டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் விளையாடினார் அப்போது அவர் ஐபிஎல் போட்டி குறித்து கூறுகையில், ' ‘ஐபிஎல் தொடரில் நான் விளையாடிய அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. மிகச்சிறந்த அனுபவம். மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கிரிக்கெட் போட்டித் தொடர் ஐபிஎல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனக்கு கிடைத்த மிகச் சிறந்த அனுபவம்' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.