தோனி மீது பாகிஸ்தான் ரசிகர் காட்டிய பாசம்: வைரல் வீடியோ
- IndiaGlitz, [Sunday,October 24 2021]
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது என்பதும், இன்றைய போட்டி துபாய் மைதானத்தில் இரவு ஏழு முப்பது மணிக்கு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியை இந்தியா பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி உலகமே பார்க்க காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகரான சாச்சோ சிகாகோ என்பவர் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி தான் ஜெயிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அதே நேரத்தில் தோனி எனது மிகவும் அன்புக்குரியவர், அவருடைய தீவிர ரசிகர் நான் என்றும் அவர் கூறியுள்ளார்
மேலும் பாகிஸ்தான் அணிக்கும் தோனிக்கும் நான் ஆதரவளிப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் பலர் என்னை துரோகி என்கிறார்கள். ஆனால் அதுகுறித்து எனக்கு கவலை இல்லை. மனிதநேயம் தான் முக்கியம். நான் இரு நாடுகளையும் நேசிக்கிறேன்’ என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் இந்திய அணிக்கு வழிகாட்டுபவராக தல தோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே.
Man of Masses @msdhoni ?????? pic.twitter.com/O5vrvNN7eu
— . (@Safari_ArunINC) October 23, 2021