'வாத்தி கம்மிங்' பாடலுக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் ’மாஸ்டர்’. இந்த படம் கோவிட் நேரத்திலும் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் வசூல் அளவில் ரூபாய் 200 கோடிக்கு மேல் திரையரங்கிலும் ஓடிடியிலும் இந்த படம் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது என்பதும் யூடியூபில் 200 மில்லியனுக்கும் மேலாக பார்வையாளர்கள் இந்த பாடலுக்கு கிடைத்து சாதனை புரிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழ் ரசிகர்கள் உள்பட இந்தியர்கள் மட்டுமின்றி பாகிஸ்தானில் இருந்தும் தற்போது வாத்தி கம்மிங் பாடலுக்கு வாழ்த்துக்கள் கிடைத்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ’அனிருத் அவர்களின் மேஜிக்கல் இசையை கேட்டு பிரமித்ததேன். பாகிஸ்தானை சேர்ந்த எனக்கு உங்களது மொழி புரியவில்லை, ஆனால் வாத்தி கம்மிங் பாடலின் எனர்ஜி எனக்கு மிகவும் பிடித்துள்ளது, என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்திய எல்லை தாண்டி பாகிஸ்தானிலும் ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்பது தெரியவந்து உள்ளது
இந்த நிலையில் அனிருத் தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார் என்பதும் ’மாஸ்டர்’ படத்தை போலவே இந்த படத்திற்கும் சூப்பர் ஹிட் பாடல்களை அவர் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
@anirudhofficial man you are magician of south music industry ???? i am from #Pakistan can't understand south Languages but now a days your song #VaathiComing is on repeat! Love, Peace ans Best wishes for you! Stay Blessed ????
— DJ Adeel Khan (@deejayyadeel) June 23, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com