கிரிக்கெட் வீரர் அஃப்ரிடிக்கு கொரோனா!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாஹித் அஃப்ரிடிக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்தத் தகவலை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். “கடந்த வியாழக் கிழமை முதல் எனக்கு உடல் மோசமாக வலித்தது. நான் கொரோனா பரிசோதனை செய்தேன். துருதிஷ்டவசமாக எனக்கு தொற்று உறுதியாகியுள்ளது. விரைவில் மீண்டு வர உங்களின் பிரார்த்தனை தேவை... இன்ஷா அல்லாஹ்” எனப் பதிவிட்டுள்ளார்.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் வங்கதேச கிரிக்கெட் வீரர் முஷாபர் ரஹ்மான் விளையாடிய கிரிக்கெட் பேட்டை 2000 ஆம் டாலருக்கு ஏலத்தில் எடுத்து இருந்தார். இச்செயலுக்கு ஐசிசி பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தது. கடந்த 2 மாதங்களாக ஊரடங்கினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மளிகைப் பொருட்களையும் நிவாரணத் தொகைகளையும் வழங்கி வந்தார் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் ஜுன் 11 ஆம் தேதி தனக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். பாகிஸ்தானில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் விளையாட்டு வீரர்களில் இவர் 3 ஆவது நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக தவ்ஷ்பீக் உமர் மற்றும் ஜாபர் சர்பாஸ்க்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பதை அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
I’ve been feeling unwell since Thursday; my body had been aching badly. I’ve been tested and unfortunately I’m covid positive. Need prayers for a speedy recovery, InshaAllah #COVID19 #pandemic #hopenotout #staysafe #stayhome
— Shahid Afridi (@SAfridiOfficial) June 13, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments