கிரிக்கெட் கிரவுண்டில் பிரபல வீரருக்கு நெஞ்சுவலி… உருகும் ரசிகர்கள்!
- IndiaGlitz, [Wednesday,December 22 2021] Sports News
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஓப்பனராக இருந்துவரும் 34 வயதான அபித் அலி நேற்று உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டபோது நெஞ்சுவலியால் துடித்துள்ளார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் அதிர்சசியை வெளியிட்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியினர் சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் கலந்து கொண்டனர். இதையடுத்து நாடு திரும்பிய வீரர்கள் பலரும் அந்நாட்டில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று கராச்சியில் நடைபெற்ற போட்டி ஒன்றில் கலந்து கொண்டு பிரபல வீரர் அபித் அலி சென்ரல் பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளார்.
அப்போது பேட்டிங் செய்துகொண்டிருந்த அபித் அலி அரைச்சதத்தை தாண்டியபோது தன்னால் விளையாட முடியவில்லை என்பதை நடுவரிடம் தெரிவித்துள்ளார். உடனே அவரை மருத்துவக்குழுவினர் பரிசோதித்துப் பார்த்துவிட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையடுத்து அபித் அலியின் இதயத்தில் இரத்த ஓட்டம் குறைந்து போயிருப்பதாகத் தெரிவித்த மருத்துவர்கள் அவரை தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தற்போது சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அபித் அலி தற்போது நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் கிரிக்கெட் கிரவுண்டிற்குள் பிரபல வீரர் நெஞ்சுவலியால் துடித்த காட்சியைப் பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் விளையாடிவரும் அபித் அலி இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு 1180 ரன்களை குவித்துள்ளார். சமீப்த்தில் வங்கத்தேசத்திற்கு எதிரான போட்டியில் இவர் 263 ரன்களை எடுத்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த ஓவரில் அதிக ரன்களை எடுத்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
இந்நிலையில் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அபித் அலி விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.