மியா கலீஃபா-வின் டிக்டாக் கணக்கு முடக்கம்...! தக்க பதிலடி கொடுத்த நடிகை...!
Send us your feedback to audioarticles@vaarta.com
கவர்ச்சி நடிகை மற்றும் இணைய பிரபலமான நடிகை மியா கலீஃபா-வின் டிக்டாக் கணக்கை, மூன்றாவது முறையாக பாகிஸ்தான் அரசாங்கம் முடக்கியுள்ளது.
28 வயதே நிரம்பிய ஆபாச பட நடிகையான மியா கலீஃபா அமெரிக்கவைச்சேர்ந்தவர். இவர் கத்தோலிக மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், அதை பின்பற்றவில்லை. கடந்த 2011- ஆம் ஆண்டு, தன்னுடைய 18 வயதில், அமெரிக்கர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதன் பின் 2014-ஆம் ஆண்டு தனது 22 வயதில் ஆபாச படங்களில் தோன்ற ஆரம்பித்தார். இவர் நடித்தது குறிப்பிட்ட ஒரு சில மாதங்கள் என்றாலும், ஆபாச இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நபராக இருந்தார். மியாவின் காணொளிகள் 15 லட்சம் பார்வையாளர்களால் குறுகிய காலங்களில் பார்க்கப்பட்டது. இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
இதுவரை மியா-வின் டிக் டாக் கணக்கை மூன்று முறை முடக்கம் செய்துள்ளது பாகிஸ்தான் அரசு. இதற்கு டுவிட்டரில் தக்க பதிலடி கொடுத்துள்ளார் மியா. அவர் பதிவிட்டிருப்பதாவது, "என்னுடைய டிக் டாக் கணக்கை முடக்கிய பாகிஸ்தான் அரசிற்கு எதிராக நீங்கள் குரல் கொடுங்கள். பாகிஸ்தானில் உள்ள பாசிசத்தை விரும்பாத என் ரசிகர்களுக்காக, டுவிட்டரில் காணொளிகளை பதிவிடுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
மியா-விடம் எந்த அறிவிப்பையும் வெளியிடாமல், பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் அவரின் டிக்டாக் கணக்கிற்கு தடை விதித்துள்ளது. தகவல் தொடர்பு ஆணையம் இதன் பின்னணி குறித்த எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் இதற்குமுன் தடை விதித்த பாகிஸ்தான் அரசு "ஒழுக்கக்கேடான மற்றும் நெறிமுறையற்ற காணொளிகள் தடைசெய்யப்படும்" என்று விளக்கம் கூறியிருந்தது.
மியாவின் ரசிகர் ஒருவர் தான் டுவிட்டர் மூலம், அவரின் டிக்டாக் செயலி முடக்கம் குறித்த தகவலை தெரிவித்தார். டிக் டாக்-இல் இவரை 22.2 மில்லியன் நபர்கள் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments