பாலியல் குற்றத்துக்கு ஆண்மை நீக்கத் தண்டனையா??? அசத்தும் புதுச்சட்டம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாகிஸ்தான் அரசாங்கம் பாலியல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் சடத்த்திற்கு ஒப்புதல் வழங்கி அதிரடி காட்டி இருக்கிறது. அண்மை காலமாக அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் அதிகமாகி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே பாலியல் குற்ற வழக்குகளுக்குக் கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதையடுத்து கடந்த மாதம் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவை இப்புதிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து அந்நாட்டின் அதிபர் ஆரிப் ஆல்வி நேற்று ஆண்மை நீக்கம் செய்யும் புதிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவுப்படுத்த இந்த அவசர சட்டம் உதவும். கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிக்க நாடு முழுவதும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிடுவது தடை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும் என்றும் 4 மாதங்களில் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கவும் வழிவகை செய்யப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது. மேலும் இந்தச் சட்டத்தின்படி கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மைத் தன்மையை நீக்கும் மருந்து கொடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பான முடிவை அரசு நியமித்த மருத்துவர்கள் குழு தீர்மானிக்கும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இப்புதிய சட்டத்திற்கு அந்நாட்டு மக்கள் கடும் வரவேற்பு அளித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout