இளம்வீரர் வீசிய பந்தால் பேட்ஸ்மேனின் ஹெல்மெட் 2 ஆக பறந்த வைரல் காட்சி!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேற்கு சுற்றுப்பயணம் மெற்கொண்டு உள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று தொடரை 1-1 என்ற நிலையில் சமன் செய்து உள்ளது.

இந்தப் போட்டியின்போது நடைபெற்ற ஒரு காட்சிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் முதல் வீரர் டினாஷே கமுன்ஹுகாம்வே பேட்டிங் செய்தார். அவருக்கு பாகிஸ்தானின் இளம் வீரர் அர்தஷ் இக்பால் பந்து வீசி அதிரடி காட்டினார். அப்படியே இரண்டாவது ஓவரையும் வீசத் தொடங்கினார். அப்போதுதான் அர்தஷ் வீசிய பந்து படுவேகத்தில் பவுன்ஸ் ஆனது. அதேநேரத்தில் இந்த பந்து பேட்ஸ்மேனின் ஹெல்மெட் மீது பட்டு அவரது ஹெல்மெட்டையே பதம் பார்க்கவும் செய்தது.

இதனால் ஹெல்மெட்டின் மேல் ஓடு இரண்டாவது உடைந்து சிதறியது. இந்த காட்சியைப் பார்த்து கிரவுண்டில் இருந்த பலரும் பதறிய நிலையில் பேட்ஸ்மேன் தனது கிளவுஸ் மற்றும் ஹெல்மெட்டை கழட்டினார். இதனால் ஒட்டுமொத்த கிரவுண்டே பதற்றமாகிறது. இதையடுத்து ஜிம்பாப்வே வீரர் கமுன்ஹுகாம்வேவிற்கு மூளை அதிர்ச்சி சோதனை நடத்தப்பட்டு மீண்டும் போட்டி தொடர்ந்து நடத்தப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் இளம்வீரர் அர்தஷ் வீசிய பவுன்சர் பந்து தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.