மனைவி, குழந்தைகளுக்கு அரிசி-பருப்பு வாங்கி கொடுத்துவிட்டு தற்கொலை செய்த பெயிண்டர்

  • IndiaGlitz, [Saturday,April 18 2020]

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி நூற்றுக்கணக்கான மனித உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் ஏற்படும் பலியை விட பசியால் பட்டினியால் ஏற்படும் பலி அதிகம் இருக்கும் என்றும் எனவே ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திர்கு அரசு உதவ வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள முகேஷ் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் என்பவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். பெயிண்டிங் தொழில் மூலம் கிடைத்து வரும் வருமானத்தில் மனைவி மற்றும் குழந்தைகளை காப்பாற்றி வந்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த சில வாரங்களாக அவருக்கு வேலை இல்லை என்பதால் வருமானமும் இல்லை.

தனது கண்ணெதிரே மனைவி மற்றும் குழந்தைகள் பசியால் துடித்து அழுவதை பார்த்து அவரால் சகிக்க முடியவில்லை. இந்த நிலையில் தனது மொபைல் போனை 2500 ரூபாய்க்கு விற்ற முகேஷ் அந்த பணத்தில் வீட்டிற்கு தேவையான அரிசி பருப்பு ஆகியவைகளை மொத்தமாக வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார். அரிசி பருப்பை பார்த்ததும் மனைவி குழந்தைகள் சந்தோஷம் அடைந்தனர். சாப்பாடு ஒரு பக்கம் தயாராகிக் கொண்டிருந்தபோது திடீரென முகேஷ் இன்னொரு அறைக்கு சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் மனைவி, குழந்தைகளின் சாப்பாட்டு தேவையை பூர்த்தி செய்த பெயிண்டரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

கொரோனாவால் சிகிச்சை பெற்று வரும் மகளின் வருகைக்காக காத்திருக்கும் தாயின் சடலம்!

இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்

மும்பையில் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 20 கடற்படை மாலுமிகள்!!!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம்,

ஊரடங்கை தளர்த்த கோரும் அமெரிக்க மாகாணங்கள்!!! பதறும் சுகாதாரத்துறை அதிகாரிகள்!!!  

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. அதேபோல பலி எண்ணிக்கையும் 35 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.

கொரோனாவில் இறந்தவர்களின் பலி எண்ணிக்கையை சீன அரசு மறைக்கிறதா??? தொடரும் குற்றச்சாட்டுகளுக்கான பதில்!!!

சீனாவின் வுஹாண் மாகாணத்தில் கொரோனா நோய்த்தொற்றில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து வெளியிட்டதாக அமெரிக்கா முதற்கொண்டு பல மேற்கத்திய நாடுகள் கடுமையாகக் குற்றம்சாட்டி வந்தன.

கொரோனா விடுமுறையில் வயலில் உழுத பிரபல நடிகை!

கொரோனா விடுமுறை வந்தாலும் வந்தது, தமிழ் திரை உலகில் உள்ள பிரபல நடிகர் நடிகைகள் பலர் தங்களுடைய சமூக வலைதளங்களில் வித்தியாசமான, காமெடியான, சீரியசான வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களை