பிக்பாஸ் ஷிவானியுடன் நடித்த சீரியல் நடிகர் விவகாரத்து: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Monday,February 01 2021]

பிக்பாஸ் ஷிவானி முக்கிய கேரக்டரில் நடித்த ’பகல் நிலவு’ சீரியலின் நாயகன் திடீரென தனது மனைவியை ராஜினாமா செய்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொலைக்காட்சி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற சீரியல் ’பகல் நிலவு’. அஸிம் மற்றும் ஷிவானி ஆகியோர் நடித்த இந்த தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இதனை அடுத்தே ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பிக்பாஸ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக அஸிமும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது அதன் பின்னர் சில காரணங்களால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் அஸீம் தனது மனைவியை விவாகரத்து செய்திருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இது குறித்து அவர் கூறியபோது ’அனைவருக்கும் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் சட்டப்படி பிரிந்து விட்டோம். பரஸ்பரம் ஒப்புக்கொண்டு இந்த விவாகரத்து கிடைத்துள்ளது. இது குறித்து மேற்கொண்டு எதுவும் நான் பேச விரும்பவில்லை’ என்று கூறியுள்ளார் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது