பாகுபலியை முறியடித்தது பத்மாவதி

  • IndiaGlitz, [Thursday,October 12 2017]

எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்ட திரைப்படமான 'பாகுபலி 2' இந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. தென்னிந்திய படம் ஒன்று உலக அளவில் ரூ.1600 கோடிக்கும் மேல் வசூல் செய்த சாதனை தென்னிந்திய திரையுலகிற்கே ஒரு பெருமையான விஷயம்

இந்த நிலையில் பாகுபலி 2 டிரைலரை 24 மணி நேரத்தில் 11 மில்லியன் பேர் பார்த்த நிலையில் பத்மாவதி' படத்தின் டிரைலரை 24 மணிநேரத்தில்  15 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். பாகுபலி 2' படத்திற்கு இணையான பிரமாண்டம், போர்க்காட்சிகள், ரன்வீர்சிங், தீபிகா படுகோனேவின் நடிப்பு, பின்னணி இசை என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளதால் இந்த படத்தின் டிரைலர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'பாகுபலி 2' படத்தின் டிரைலர் சாதனையை முறியடித்த 'பத்மாவதி', வசூல் சாதனையையும் முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அக்சராஹாசனுக்கு இன்று இரட்டை திருநாள்

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான அக்சராஹாசனுக்கு இன்று பிறந்த நாள் என்பது மட்டுமின்றி அவர் நடித்த முதல் தமிழ்ப்படமான 'விவேகம்' திரைப்படம் இன்று 50வது நாள்

மெர்சல் தயாரிப்பாளர் ஹேமாருக்மணி வெளியிடும் டிரைலர்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம் இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் நிலையில் வரும் தீபாவளி தினத்தில்ரிலீஸ் ஆகவுள்ளது.

மெர்சலுக்கு முன் விஜய் நடித்த இரண்டு ஹீரோயின் படங்கள்

மெர்சலுக்கு முன் விஜய் நடித்த இரண்டு ஹீரோயின் படங்கள்

வெறும் இரண்டு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிய சூப்பர்ஸ்டார் ரஜினி! யாரிடம் தெரியுமா?

ரஜினிகாந்த் கால்ஷீட் கிடைக்கும் என்றால் பல கோடிகளை கொட்டி கொடுக்க பல தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கும் நிலையில் வெறும் இரண்டே இரண்டு ரூபாய் அட்வான்ஸ் வாங்கி ஒரு படத்தில் அவர் நடித்துள்ளார்

அரசியல்வாதி ஆனாலும் கமல்ஹாசனால் நடிப்பை விட முடியாது: பாரதிராஜா

கமல்ஹாசன் ஒரு அற்புதமான கலைஞன். சினிமாவுக்காக கையை வெட்ட வேண்டும் என்றாலும் வெட்டி கொள்வார். உலக படங்களை பார்த்து ஏன் நம்மால் இந்த அளவுக்கு படம் எடுக்க முடியவில்லை என்று கோபப்படுவார்.