close
Choose your channels

ரூ.200 கோடி கிளப்பில் இணைந்தது தீபிகாவின் 'பத்மாவத்'

Monday, January 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாஹித் கபூர் நடிப்பில் உருவான 'பத்மாவத்' திரைப்படம் பெரும் பிரச்சனைகளை சந்தித்து கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. இருப்பினும் ஒருசில மாநிலங்களில் இந்த படம் வெளிவரவில்லை என்றாலும் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கும் மேலும், உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் மேலும் இந்த படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பத்மாவத்' திரைப்படம் சென்னையில் ரூ.2.16 கோடியும், செங்கல்பட்டில் ரூ.3.81 கோடியும், கோவையில் ரூ.1.65 கோடியும் என தமிழகத்தில் மட்டும் சுமார் 9 கோடி வசூல் செய்துள்ளது. அதேபோல் வட மாநிலங்கள் மற்றும் உலகம் முழுவதும் சேர்த்து இந்த படம் சுமார் 230 முதல் 240 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஷாஹித் கபூரின் திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் கொடுத்த படமாக இந்த படம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment