கலாச்சாரத்திற்கு எதிரானது: பாகிஸ்தானில் அக்சயகுமார் படத்திற்கு தடை
- IndiaGlitz, [Sunday,February 11 2018]
பெண்களுக்கு நாப்கின்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படமான 'பேட்மேன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை பாகிஸ்தானில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் பாகிஸ்தான் திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினர் இசாக் அகமது கூறியுள்ளார்.
'பாகிஸ்தான் கலாசாரம், பாரம்பரியத்துக்கு எதிராக இருக்கும் வெளிநாட்டு திரைப்படங்களை வெளியிட திரைப்பட விநியோகஸ்தர்களை தாங்கள் அனுமதிப்பதில்லை என்றும் அந்த வகையில் அக்சயகுமாரின் பேட்மேன்' படத்துக்கு தடை விதித்துள்ளதாகவும் அவர் கூறியுளார்.
இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சையது நூர் என்பவர் இதுகுறித்து கூறியபோது, 'பாகிஸ்தான் திரைப்பட விநியோகஸ்தர்களிடம், வெளிநாடுகளில் இருந்து எத்தகைய திரைப்படங்களை இறக்குமதி செய்து வெளியிடுவது என்பது குறித்து பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.