விஜயகாந்துக்கு இந்தியாவின் உயரிய விருது அளித்த மத்திய அரசு.. வேறு யார் யாருக்கு விருது?

  • IndiaGlitz, [Friday,January 26 2024]

கேப்டன் விஜயகாந்துக்கு மத்திய அரசு இந்தியாவின் உயரிய விருதை அளித்து கௌரவித்துள்ளது.

இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் மறைந்த நிலையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார் என்பதும் சென்னை வந்தபோது கூட அவர் விஜயகாந்த் குறித்து பெருமையாக பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜயகாந்தின் கலையுலக சேவையை பாராட்டிய அவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் நடித்த நடிகை வைஜெயந்திமாலா அவர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கும் அவரது கலைச்சேவைக்காக பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 22 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் முழு விவரங்கள் இதோ:

1. திருமதி வைஜெயந்திமாலா பாலி - கலை - தமிழ்நாடு
2. ஸ்ரீ கொனிடேலா சிரஞ்சீவி - கலை - ஆந்திரப் பிரதேசம்
3. ஸ்ரீ எம் வெங்கையா நாயுடு - பொது விவகாரங்கள் - ஆந்திரப் பிரதேசம்
4. ஸ்ரீ பிந்தேஷ்வர் பதக் (மரணத்திற்குப் பின்) - சமூகப் பணி - பீகார்
5. திருமதி பத்மா சுப்ரமணியம் - கலை - தமிழ்நாடு
6. ஸ்ரீ விஜயகாந்த் (மரணத்திற்குப் பின்) - கலை - தமிழ்நாடு
7. ஸ்ரீ ஹோர்முஸ்ஜி என் காமா இலக்கியம் மற்றும் - கல்வி - பத்திரிகை மகாராஷ்டிரா
8. ஸ்ரீ மிதுன் சக்ரவர்த்தி - கலை - மேற்கு வங்காளம்
9. ஸ்ரீ சீதாராம் ஜிண்டால் - வர்த்தகம் மற்றும் தொழில் - கர்நாடகா
10. ஸ்ரீ யங் லியு - வர்த்தகம் மற்றும் தொழில் - தைவான்
11. ஸ்ரீ அஷ்வின் பாலசந்த். - மருத்துவம் - மகாராஷ்டிரா
12. ஸ்ரீ சத்யபிரதா முகர்ஜி (மரணத்திற்குப் பின்) - பொது விவகாரங்கள் - மேற்கு வங்காளம்
13. ஸ்ரீ ராம் நாயக் பொது - விவகாரங்கள் - மகாராஷ்டிரா
14. ஸ்ரீ தேஜஸ் மதுசூதன் படேல் - மருத்துவம் - குஜராத்
15. ஸ்ரீ ஓலஞ்சேரி ராஜகோபால் - பொது விவகாரங்கள் - கேரளா
16. ஸ்ரீ தத்தாத்ரே அம்பாதாஸ் மாயலூ அல்லது ராஜ்தத் - கலை - மஹாராஷ்டிரா
17. ஸ்ரீ டோக்டன் ஆர்ஹூம்போ) மற்றவை - ஆன்மிகம் - லடாக்
18. ஸ்ரீ பியாரேலால் சர்மா - கலை - மகாராஷ்டிரா
19. ஸ்ரீ சந்திரேஷ்வர் பிரசாத் தாக்கூர் - மருத்துவம் - பீகார்
20. திருமதி உஷா உதுப் - கலை - மேற்கு வங்காளம்
21. திருமதி எம் பாத்திமா பீவி (மரணத்திற்குப் பின்) - பொது விவகாரங்கள் - கேரளா
22. ஸ்ரீ குந்தன் வியாஸ் இலக்கியம் மற்றும் கல்வி - பத்திரிகை - மகாராஷ்டிர

More News

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்.. புற்றுநோய்க்கு பலியான பரிதாபம்..!

 இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார் என்ற செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு வயது 47.

மதச்சார்பற்ற இந்தியாவில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது: ராமர் கோவில் குறித்து நடிகை ரேவதி..!

மதச்சார்பற்ற இந்தியாவில் ஆன்மீக நம்பிக்கைகளை தனிப்பட்ட முறையில் வைத்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்ததாகவும் ஆனால் ராமர் கோவில் இந்த விஷயத்தை மாற்றி இருப்பதாகவும் நடிகை ரேவதி தனது சமூக

விஜய் டிவி 'நீ நான் காதல்' ஹீரோவுக்கு திருமணம்.. மணமகள் திரைப்பட நடிகை..!

 சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் சின்னத்திரையில் இருக்கும் நட்சத்திரங்களை திருமணம் செய்து கொள்வார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

விஜய்யின் 'தளபதி 69' படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் யார்? கசிந்த தகவல்..!

தளபதி விஜய் தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், 'கோட்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் என்பது

நடிகர் நரேன் மிரட்டும் மிஸ்டரி ஹாரர் திரில்லர்  'ஆத்மா': பர்ஸ்ட்லுக் ரிலீஸ்

KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், நடிகர் நரேன் நடிப்பில், மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ஆத்மா