எல்லோரும் 'படையப்பா' நீலாம்பரி போல மாறுங்கள்: வைரலாகும் மீம்ஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க அனைவரும் ’படையப்பா’ நீலாம்பரி போல் மாறுங்கள் என சமூக வலைத்தளத்தில் ஒரு மீம்ஸ் வைரலாகி வருகிறது.
கொரோனாவை கண்டு ஒருபக்கம் உலகம் முழுவதும் அஞ்சி நடுங்கி வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் கொரோனாவை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி மீம்ஸ் கிரியேட் செய்து அதில் நகைச்சுவையாக விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
கொரோனா பரவுவதை தடுக்க தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அரசின் அறிவிப்பை பாமரரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மீம்ஸ் கிரியேட்டர் ஒருவர் உருவாக்கிய படையப்பா நீலாம்பரி மீம்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.
’படையப்பா’ படத்தில் இடம்பெற்ற ஒரு கேரக்டரான நீலாம்பரி ஒரே அறையில் 18 வருடங்கள் தங்கி இருப்பது போல் படமாக்கப்பட்டிருக்கும். இதேபோல் கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள படையப்பா நீலாம்பரி போல் 14 நாட்களுக்கு யாரையும் சந்திக்காமல் வெளியே சுற்றாமல் அறையிலேயே தங்கி இருங்கள் என்று அந்த மீம்ஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
படையப்பா படத்தில் நீலாம்பரி வில்லி கேரக்டர் மூலம் நகைச்சுவையாக பாமர மக்களுக்கு புரியும் வகையிலும் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout