எல்லோரும் 'படையப்பா' நீலாம்பரி போல மாறுங்கள்: வைரலாகும் மீம்ஸ்

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க அனைவரும் ’படையப்பா’ நீலாம்பரி போல் மாறுங்கள் என சமூக வலைத்தளத்தில் ஒரு மீம்ஸ் வைரலாகி வருகிறது.

கொரோனாவை கண்டு ஒருபக்கம் உலகம் முழுவதும் அஞ்சி நடுங்கி வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் கொரோனாவை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி மீம்ஸ் கிரியேட் செய்து அதில் நகைச்சுவையாக விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

கொரோனா பரவுவதை தடுக்க தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அரசின் அறிவிப்பை பாமரரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மீம்ஸ் கிரியேட்டர் ஒருவர் உருவாக்கிய படையப்பா நீலாம்பரி மீம்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.

’படையப்பா’ படத்தில் இடம்பெற்ற ஒரு கேரக்டரான நீலாம்பரி ஒரே அறையில் 18 வருடங்கள் தங்கி இருப்பது போல் படமாக்கப்பட்டிருக்கும். இதேபோல் கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள படையப்பா நீலாம்பரி போல் 14 நாட்களுக்கு யாரையும் சந்திக்காமல் வெளியே சுற்றாமல் அறையிலேயே தங்கி இருங்கள் என்று அந்த மீம்ஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

படையப்பா படத்தில் நீலாம்பரி வில்லி கேரக்டர் மூலம் நகைச்சுவையாக பாமர மக்களுக்கு புரியும் வகையிலும் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மகனுக்கு கொரோனா இருப்பதை மறைத்த பெண் அதிகாரி சஸ்பெண்ட்

கொரோனா பாதிப்புக்கு எதிராக மத்திய அரசும் நாட்டின் அனைத்து மாநில அரசும் தீவிரமாக போராடி வருகின்றன. ஒருவருக்கு தொற்றிய கொரோனா இன்னொருவருக்கு பரவக்கூடாது

பிரதமர் மோடிக்கு ஆதரவு கொடுத்த கமல்ஹாசன்!

அரசியல்ரீதியாக பிரதமர் மோடியையும், பாரதிய ஜனதா கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்,

பிரதமர் மோடிக்கு நடிகை வரலட்சுமி கேட்ட ஆவேசமான கேள்வி

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கு இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நிர்பயாவுக்கு நடந்தது என்ன??? வழக்குகள், தண்டனை குறித்த ஒரு தொகுப்பு!!!

டெல்லியில் 16, டிசம்பர் 2012 அன்று குளிர்ந்த இரவு நேரத்தில் 23 வயது பிசியோதெரபி மருத்துவம் படிக்கு

பிரபல பாடகிக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா