படைவீரன்: திரை முன்னோட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த 'மாரி' படத்தில் வில்லனாக அறிமுகமான பிரபல பின்னணி பாடகர் விஜய்யேசுதாஸ் தற்போது ஹீரோவாக நடித்துள்ள படம் தான் 'படைவீரன்'. இவருடன் இயக்குனர் இமயம் பாரதிராஜா, அகில், அம்ரிதா, உள்பட பல நடித்துள்ள இந்த படத்தை தனா இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக்ராஜா இசையமைப்பில் ராஜவேல் மோகன் ஒளிப்பதிவில், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்த படத்தில் நடிகர் தனுஷ், 'லோக்கல் சரக்கா பாரின் சரக்கா... ஊத்திக்குடிச்சா எல்லாம் ஒன்னுடா.. என்று தொடங்கும் பாடல் ஒன்றை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,.
இந்த படத்தில் பாரதிராஜாவுடன் நடித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் கூறிய விஜய் யேசுதாஸ், 'இந்த படத்தில் பாரதிராஜா அவர்களுக்கும் எனக்கும் ஒரு துடிப்பான உறவு. அதுக்குள்ள ஒரு கதை இருக்கு. இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின் லவ் ஸ்டோரி அழகாக அமைந்தாலும்கூட, பாரதிராஜா சாருக்கும் எனக்குமான காட்சிகள் படத்தோட இதயம் மாதிரி. அதோடு நண்பர்கள், காதல் விஷயம்னு இழையோடும். கிராமமும் அது சார்ந்த சில சம்பவங்களும்தான் களம். அதை பக்கா கமர்ஷியல் படமாக்கியிருக்கிறார், இயக்குநர் தனா.
தேனி மாவட்டத்தில் உயிர்ப்போடு வாழும் ஒரு கிராமமும் அதன் மண்சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையுமாக உருவாகும் படம் தான் ‘படைவீரன்’ என்று இயக்குனர் தனா தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com