பசுவதைக்கு எதிராக களம் இறங்கிய பாயும் புலி
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் தற்போது திரையுலகில் மட்டுமின்றி சமூக சேவையிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய பிறந்த நாளின்போது பல சமூக தொண்டுகளை செய்த விஷால், பிறந்த நாளுடன் விட்டுவிடாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமூக சேவையில் ஈடுபடும் வழக்கத்தை கடைபிடித்து வருகிறார். அந்த வகையில் இன்று நடிகர் விஷால் சென்னை நுங்கம்பாகக்த்தில் உள்ள MOP வைஷ்ணவ பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பசுக்களை கொல்ல வேண்டாம் என்பதை வலியுறுத்தும் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். விஷாலுடன் இயக்குனர் சுசீந்திரன் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட கேரளாவில் தெரு நாய்களை கொல்வதை எதிர்த்து குரல் கொடுத்தவர் விஷால் என்பது அனைவரும் தெரிந்ததே. அந்த வகையில் அனைத்து உயிர்களிடமும் கருணை காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் விஷால் செயல்பட்டு வருகிறார் என்பது தெரியவருகிறது.
இந்த விழாவில் பேசிய விஷால், "ஒவ்வொரு உயிரினத்திற்கும் இந்த உலகில் வாழ உரிமை உண்டு. பசுக்களை கொல்ல வேண்டாம் என்று கூறுவதால் நான்வெஜ் சாப்பிட வேண்டாம் என்று நான் கூறுவதாக எடுத்து கொள்ள வேண்டாம். எப்படியும் ஒரு மாட்டை இறைச்சிக்காக கொல்லத்தான் போகிறார்கள். ஆனால் சித்திரவதை செய்து கொல்ல வேண்டாம் என்பதே என்னுடைய வேண்டுகோள். அதேபோல் கேரளாவிற்கு மாடுகளை ஏற்றி செல்லும் போது 10 அல்லது 13 மாடுகள் மட்டுமே ஏற்றிச் செல்லக்கூடிய வாகனங்களில் 40 முதல் 50 மாடுகளை ஏற்றி செல்கின்றனர். போகிற வழியிலேயே சில மாடுகள் இறந்துவிடுவதை பார்த்திருக்கின்றோம். இதுபோன்று நடக்காமல் இருக்க ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஃபேஸ்புக் பக்கம். இந்த ஃபேஸ்புக் பக்கத்தை நீங்கள் எல்லோரும் பிரபலப்படுத்தி அனைத்து உயிரினங்களையும் காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments