பசுவதைக்கு எதிராக களம் இறங்கிய பாயும் புலி

  • IndiaGlitz, [Monday,August 31 2015]

விஷால் தற்போது திரையுலகில் மட்டுமின்றி சமூக சேவையிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய பிறந்த நாளின்போது பல சமூக தொண்டுகளை செய்த விஷால், பிறந்த நாளுடன் விட்டுவிடாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமூக சேவையில் ஈடுபடும் வழக்கத்தை கடைபிடித்து வருகிறார். அந்த வகையில் இன்று நடிகர் விஷால் சென்னை நுங்கம்பாகக்த்தில் உள்ள MOP வைஷ்ணவ பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் பசுக்களை கொல்ல வேண்டாம் என்பதை வலியுறுத்தும் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். விஷாலுடன் இயக்குனர் சுசீந்திரன் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட கேரளாவில் தெரு நாய்களை கொல்வதை எதிர்த்து குரல் கொடுத்தவர் விஷால் என்பது அனைவரும் தெரிந்ததே. அந்த வகையில் அனைத்து உயிர்களிடமும் கருணை காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் விஷால் செயல்பட்டு வருகிறார் என்பது தெரியவருகிறது.

இந்த விழாவில் பேசிய விஷால், "ஒவ்வொரு உயிரினத்திற்கும் இந்த உலகில் வாழ உரிமை உண்டு. பசுக்களை கொல்ல வேண்டாம் என்று கூறுவதால் நான்வெஜ் சாப்பிட வேண்டாம் என்று நான் கூறுவதாக எடுத்து கொள்ள வேண்டாம். எப்படியும் ஒரு மாட்டை இறைச்சிக்காக கொல்லத்தான் போகிறார்கள். ஆனால் சித்திரவதை செய்து கொல்ல வேண்டாம் என்பதே என்னுடைய வேண்டுகோள். அதேபோல் கேரளாவிற்கு மாடுகளை ஏற்றி செல்லும் போது 10 அல்லது 13 மாடுகள் மட்டுமே ஏற்றிச் செல்லக்கூடிய வாகனங்களில் 40 முதல் 50 மாடுகளை ஏற்றி செல்கின்றனர். போகிற வழியிலேயே சில மாடுகள் இறந்துவிடுவதை பார்த்திருக்கின்றோம். இதுபோன்று நடக்காமல் இருக்க ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஃபேஸ்புக் பக்கம். இந்த ஃபேஸ்புக் பக்கத்தை நீங்கள் எல்லோரும் பிரபலப்படுத்தி அனைத்து உயிரினங்களையும் காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறினார்.

More News

அஜீத் பேரை கேட்டதுமே அதிர்ந்து போன தடங்கல்கள்.

அஜீத்தின் சூப்பர் ஹிட் படமான 'என்னை அறிந்தால்' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வரி 'உனக்கென்ன வேணும் சொல்லு'....

ஒரே படத்தில் டோலிவுட்டில் அறிமுகமாகும் அனிருத்-நட்ராஜ்

கோலிவுட், பாலிவுட் என இரண்டு படவுலகிலும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராக விளங்கி வரும் நட்டி என்ற நட்ராஜ், சமீபத்தில் விஜய்யின் 'புலி'...

இரட்டை குதிரைகளில் சவாரி செய்யும் வரலட்சுமி?

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது....

அஜீத் படத்திற்காக விருது வாங்குவேன். அனிருத்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் குறுகிய காலத்தில் தனது திறமையால் ...

விஷால் ரீமேக் செய்ய விரும்பும் சூப்பர் ஸ்டார் படம்

'பாயும் புலி' ரிலீஸ், நடிகர் சங்க தேர்தல் பணிகள், சமூக பணிகள், பாண்டியராஜ் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு...