சங்கித்தனமான தொடர் " தி பேமிலி மேன்"....! பிரபல யுடியூபர் காரசார பேச்சு.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
அண்மையில் வெளியான தி பேமிலி மேன்-2 என்ற வெப்-தொடர், தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு கண்டனங்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.
தமிழ் இனத்திற்கு எதிரான பல கருத்துக்களை கூறியிருப்பதால், தமிழ்மக்கள் பலரும் தங்களது எதிர்ப்பை சமூகவலைத்தளங்கள் மூலமாக வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழ் தொண்டு ஆர்வலர்கள், சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும், இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு, போராடி வருகிறார்கள்.வெப்சீரிஸ்- களில் நடிகர், நடிகைகளுக்கு சம்பளங்கள் லட்சங்களிலும், கோடிகளிலும் குவிக்கப்படுவதால், பல நட்சத்திரங்களும் இதுபோன்ற இணையத்தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த இணையத்தொடர் குறித்து பிரபல யுடியூபர் பாரிசாலன் அவர்களிடம் நேர்க்காணல் எடுக்கப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது,
தி பேமிலி மேன் தொடரில் எந்த காட்சிகள் தமிழரை இழிவுபடுத்துமாறு காட்டப்பட்டது..?
இந்த வெப்-தொடரின் ட்ரைலர் வெளியான சமயத்தில், சமந்தா "எல்லோரையும் நான் சாகக்கொல்லுவேன்" என்ற வசனத்தை பேசியிருப்பார். இது தமிழ் ஈழ போராட்டம் என்றாலே, மக்களை சாவடிப்பது போன்ற தோற்றத்தை கொண்டுவந்திருப்பார்கள். அச்சமயத்தில் எதிர்ப்பு தெரிவித்தும், வெப்தொடர் வெளியானது. இத்தொடரில் பெரும்பாலும் 70% இலங்கை தமிழும், நம்ம ஊர் தமிழும் தான் பேசப்பட்டுள்ளது. இதனால் வெளிப்படையாகவே தமிழர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் என்று தெரிகிறது. முதல் எபிசோட், முதல் காட்சியிலே தேசிய தலைவரை தவறாக சித்தரித்துள்ளார்கள். ஒட்டுமொத்த குடும்பத்தையும் களத்தில் பலியிட்டவரை, தமிழ் இனத்திற்காக போராடியவரை கொச்சையான வசனங்கள் பயன்படுத்தி காண்பித்துள்ளார்கள். இனப்படுகொலையில் தலைவர் தப்பித்து விட்டார் என்ற பொய்யான தகவலை முதல் எபிசோட்-ல் காண்பிக்கிறார்கள். இப்படம் முழுக்க முழுக்க, ஆர்எஸ்எஸ் சித்தாந்த வாதிகளால் எடுக்கப்பட்ட படம், ஆனால் இதை ஏற்க பலரும் திட்டவட்டமாக மறுக்கிறார்கள்.
முதல் சீசனில் கேரள முஸ்லீம்களையும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பது போலவும், தவறாக சித்திரித்திருப்பார்கள். காரணம் கேரளாவில் ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு உறுதுணையாக இல்லாததால், அவர்களை தவறானவர்கள் போல கட்டமைத்து காண்பித்துள்ளார்கள்.இரண்டாவது சீசனில் தமிழர்களை தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் போன்று காண்பித்திருப்பார்கள். மொத்தத்தில் சங்கித்தனமான தொடர் தான் இந்த தி பேமிலி மேன்-2.
படைப்பை, படைப்பாக பாருங்கள் என சொல்றாங்க... அதற்கு உங்கள் கருத்து...?
வரலாற்றில் உண்மையாக நடந்த சம்பவங்களையும், தமிழ் ஈழ மக்களையும், விடுதலை புலிகள் கூட்டத்தில் இருந்தவர்களின் ஆடைகளையும், தலைவர் பிரபாகரன் அவர்களையும் குறிப்பது போன்ற அத்தனை விஷயங்களையும் செய்துவிட்டு, இதை கற்பனை கதை என சித்தரிக்கிறார்கள்.
மதுப்பழக்கம், புகை பழக்கம் இல்லாதவர்கள் மற்றும் பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்பவர்கள் மட்டும் தான் விடுதலை புலிகள் போராளிகளாக இருந்துள்ளனர். அப்படி தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தலைவரே கூறியுள்ளார். ஆனால் இவர்கள் எடுத்த தொடரோ அதற்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. பெண் போராளிகளை மூளைச்சலவை செய்து, ஆயுதங்கள் தந்து தலைவர் சண்டைப்பயிற்சிகளை கற்றுக்கொடுத்தது போல சித்தரித்துள்ளார்கள். தங்களை காப்பாற்ற ஆயுதம் எடுத்தவர்களை, மற்றவர்களை சாவடிக்க ஆயுதம் எடுத்தவர்கள் போல வன்மமாக காண்பித்துள்ளார்கள். ஹிந்தி மக்களிடம் தமிழர்கள் என்றால் தவறானவர்கள் என்பது போல கதையை கொண்டுபோயுள்ளனர்.
தமிழர்களுக்கென தனி நாடு உருவானால், நெஞ்சு வெடித்து செய்துவிடுவார்கள் போலும், அந்த அளவிற்கு பொறாமை பிடித்து கூட்டமும், நம்மை அண்டிப்பிழைக்க வந்த கூட்டமும் அலைந்து திரிகிறார்கள். அவர்களிடம் நாட்டை கொடுத்துவிட்டு பரிதவித்து வருகிறோம்.
சமந்தா கேரக்டரை எப்படி பார்க்கிறீர்கள்...?
நீ கண்ட கருமத்த எடுப்ப நாங்க பாத்திட்டு இருக்கணுமா. முதலில் இந்த மாதிரியான இயக்குனர்களை செருப்பை கழட்டி அடிக்க வேண்டும். சமந்தா நடித்த கேரக்டர் கேவலமான ரோல்.தமிழக பெண்கள் கற்புடையவர்கள், அவர்கள் கணவரை தவிர பிற ஆண்களின் செல்ல மாட்டார்கள். ஆனால் இந்த கேவலமான படம் தமிழ் பெண்களின் வாழ்வியலை கொச்சையாக காண்பித்துள்ளது. தமிழர் வீட்டு பெண்கள் மீது கை வைத்தால் கோவம் வரும் என்ற காரணத்தினாலே, இலங்கை ராணுவம் பெண்கள் மீது கை வைத்தார்கள். விடுதலை போராட்டத்தை பற்றி தெரியாதவனுக்கு, தமிழினத்திற்கு ஏற்பட்ட வலியை , பெண்கள் வைத்து கொச்சைத்தனமாக காட்சியமைத்துள்ளார்கள். இந்த வெப்-தொடரை எடுத்தவர்களுக்கு பின்னால் பெரிய அரசியல் உள்ளது" என்று காரசாரமாக கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com