'பாபநாசம் 2' படத்தில் கமல் நடிப்பாரா? இயக்குனர் ஜித்துஜோசப் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த ’த்ரிஷ்யம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான ’பாபநாசம்’ திரைப்படத்தில் கமல்ஹாசன், கவுதமி நடித்தனர் என்பதும் இந்த படத்தையும் ஜீத்து ஜோசப் இயக்கினார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நாளை ’த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த திரைப்படமும் தமிழில் ’பாபநாசம் 2’ என்ற பெயரில் ரீமேக் ஆகுமா? அவ்வாறு ரீமேக் ஆனால் அந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் கருத்து கூறிய இயக்குனர் ஜீத்து ஜோசப் கமல்ஹாசன் அனுமதி கிடைத்தால் ’பாபநாசம் 2’ படத்தை இயக்க தான் தயாராக இருப்பதாகவும் கமல்ஹாசனின் முடிவை பொறுத்தே ’பாபநாசம் 2’ படம் உருவாகுமா? என்பதை சொல்ல முடியும் என்றும் கூறினார்.
இன்று வெளியாகும் ‘’த்ரிஷ்யம் 2’ படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் வெற்றியை பொருத்து கமல்ஹாசன் இந்த படத்தில் நடிப்பது குறித்து முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout