எங்க பசங்க ஒருநாள் பாராளுமன்றத்தையே புடிப்பாய்ங்க: பிரபல பாடலாசிர்யரின் கவிதை

  • IndiaGlitz, [Wednesday,April 11 2018]

காவிரி பிரச்சனையில் அரசியல்வாதிகள் மட்டுமின்றி திரையுலகினர்களும் அவ்வப்போது போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். இன்னும் சிலர் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது ஆவேச கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் பாடலாசிரியருமான பா.விஜய் தனது சமூக வலைத்தளத்தில்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறிய கவிதை பின்வருமாறு:

'தறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு
முதல தரங்கெட்டுப் போன அதிகார வர்க்கத்தை சரிகட்டு

சே சேன்னு கூட்டம் மெதப்புல மெதக்கலாம் சேப்பாக்கம் 
அத செங்கல் செங்கலா எங்க சிங்கக் கூட்டம் தூள் தூளாக்கும்

கடற்கரை ஓரத்தை பூட்டி வைச்சுப்புட்டியே காவலாளி 
புயல் காத்துக்கு பூட்டி போட்டவன் யாருடா புத்திசாலி

ஆட்டம் நடக்கட்டும் மட்டைய தூக்கி அடிப்பாய்ங்க
எங்க பசங்க ஒருநாள் பாராளுமன்றத்தையே புடிப்பாய்ங்க

விளம்பரத்துல தன்னையே வித்தவனைல்லாம் வீரன்ற
தேச எல்லையில செத்த எத்தன பேருக்கு இது தேவைன்ற

ஒரே இந்தியா ஒரே ரத்தம்னு கூவுறியே
அட காவிரிக்கு மட்டும் கட்டத்தை மாத்தி தாவுறியே

ஆவட்டும் சாரே ஆனவரைக்கும் ஊற ஏமாத்து
எங்க பச்ச தமிழனுக்கு புரிஞ்சு போச்சு உன் பம்மாத்து

காவிரி எங்க கரிகாலனால தான் டா ஆறாச்சு
எங்க தொண்டய மிறிச்சு தொண்டுனு சொல்ற வாய் சேராச்சு

காவிரியில பலபேர் கால் கழுவ மட்டும் தான் கால் வச்சான்
அப்படி வீணான தண்ணியில விவசாய தமிழன் தான் நெல் வச்சான்

பால் குடிச்ச சிசிவோட கழுத்த நெறுச்ச பேய்க்கூட்டம்
உங்கள வெறட்டி அடிச்சு வெளுக்கத்தாண்டா இந்த போராட்டம்

தறிகெட்டுப் போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு
முதல தரங்கெட்டுப் போன அதிகார வர்க்கத்தை சரிகட்டு'

இவ்வாறு பா.விஜய் தனது கவிதையில் கூறியுள்ளார்.

More News

ரயில் மீதேறி போராட்டம் செய்த பாமக தொண்டருக்கு நேர்ந்த பரிதாபம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தால் சிலசமயம் அசம்பாவிதமும் நடந்து வரும்

சென்னை ஐபிஎல் போட்டிகள் திடீர் மாற்றம்: வெற்றியா? தோல்வியா?

சென்னையில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருந்தது.

காவிரி தாயுடன் பிரபல நடிகர் உரையாடிய கவிதை

காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்க  வேண்டும் என்பதற்காக 25 ஆண்டுகால சட்டப்போராட்டத்திற்கு பின் கிடைத்த தீர்ப்பையும் மத்திய அரசு அமல்படுத்தவில்லை

ஸ்டைலா கெத்தா திரும்பி வந்த சிஎஸ்கே!

மஞ்சர் படை வீரர்கள் சேப்பாக்கத்தில் அணிவகுத்து 1000 நாட்களுக்கு மேலாகிவிட்டது.

காவலர் தாக்கப்பட்ட விவகாரம்: சீமான் மீது கொலை முயற்சி வழக்கு

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவருடைய கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்