எங்க பசங்க ஒருநாள் பாராளுமன்றத்தையே புடிப்பாய்ங்க: பிரபல பாடலாசிர்யரின் கவிதை
Send us your feedback to audioarticles@vaarta.com
காவிரி பிரச்சனையில் அரசியல்வாதிகள் மட்டுமின்றி திரையுலகினர்களும் அவ்வப்போது போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். இன்னும் சிலர் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது ஆவேச கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் பாடலாசிரியருமான பா.விஜய் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறிய கவிதை பின்வருமாறு:
`தறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு
முதல தரங்கெட்டுப் போன அதிகார வர்க்கத்தை சரிகட்டு
சே சேன்னு கூட்டம் மெதப்புல மெதக்கலாம் சேப்பாக்கம்
அத செங்கல் செங்கலா எங்க சிங்கக் கூட்டம் தூள் தூளாக்கும்
கடற்கரை ஓரத்தை பூட்டி வைச்சுப்புட்டியே காவலாளி
புயல் காத்துக்கு பூட்டி போட்டவன் யாருடா புத்திசாலி
ஆட்டம் நடக்கட்டும் மட்டைய தூக்கி அடிப்பாய்ங்க
எங்க பசங்க ஒருநாள் பாராளுமன்றத்தையே புடிப்பாய்ங்க
விளம்பரத்துல தன்னையே வித்தவனைல்லாம் வீரன்ற
தேச எல்லையில செத்த எத்தன பேருக்கு இது தேவைன்ற
ஒரே இந்தியா ஒரே ரத்தம்னு கூவுறியே
அட காவிரிக்கு மட்டும் கட்டத்தை மாத்தி தாவுறியே
ஆவட்டும் சாரே ஆனவரைக்கும் ஊற ஏமாத்து
எங்க பச்ச தமிழனுக்கு புரிஞ்சு போச்சு உன் பம்மாத்து
காவிரி எங்க கரிகாலனால தான் டா ஆறாச்சு
எங்க தொண்டய மிறிச்சு தொண்டுனு சொல்ற வாய் சேராச்சு
காவிரியில பலபேர் கால் கழுவ மட்டும் தான் கால் வச்சான்
அப்படி வீணான தண்ணியில விவசாய தமிழன் தான் நெல் வச்சான்
பால் குடிச்ச சிசிவோட கழுத்த நெறுச்ச பேய்க்கூட்டம்
உங்கள வெறட்டி அடிச்சு வெளுக்கத்தாண்டா இந்த போராட்டம்
தறிகெட்டுப் போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு
முதல தரங்கெட்டுப் போன அதிகார வர்க்கத்தை சரிகட்டு'
இவ்வாறு பா.விஜய் தனது கவிதையில் கூறியுள்ளார்.
— PA.VIJAY (@poetpaavijay1) April 11, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com