சிம்பு-அனிருத் பாடல் குறித்து விஜய் கூறியது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியதாக கூறப்படும் 'பீப் பாடல்' குறித்த சர்ச்சை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. திரையுலகை சேர்ந்த ஒருவருக்கு பிரச்சனை என்றால் அனைவரும் கூடி அவருக்கு ஆதரவாக இருப்பது வழக்கம். ஆனால் இந்த விஷயத்தில் திரையுலகினர்களே இந்த பாடலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற ஆபாச பாடல்களை ஊக்குவிக்க கூடாது என ஏற்கனவே கவியரசு வைரமுத்து, கங்கை அமரன் உள்பட பலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில் தேசிய விருது பெற்ற பாடலாசிரியரும் நடிகருமான பா.விஜய், இந்த பாடல் குறித்து தனது கருத்தை இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பா.விஜய் கூறியதாவது, "இந்த மாதிரி பாடல்களை வேண்டும் என்றே வைரல்` ஆகவேண்டும் என்பதற்காக இப்படி சம்பந்தப்பட்டவர்களே கசிய விடுகிறார்கள். இதன் மூலம் 10 லட்சம் பேர் கேட்க வேண்டிய பாடலை 10 கோடி பேர் வரை கேட்கிறார்கள். இந்த பாடலை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் இன்று மட்டுமே குரல் கொடுப்பார்கள். அப்படியிருக்கக் கூடாது.
தொடர்ந்து இந்த பாடலை எதிர்க்க வேண்டும். இனி யாரும் இது போன்ற பாடல்களை வெளியிட அஞ்ச வேண்டும். மேலும் படங்களுக்கு தணிக்கை இருப்பது போல் பாடல்களுக்கும் தணிக்கை கொண்டு வரவேண்டும். அந்த நிலை வந்தால், இது போன்ற பாடல்கள் வெளியாவது கட்டுக்குள் கொண்டுவரப்படும்" என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் வரும் 19ஆம் தேதி கோவை காவல்நிலையத்தில் சிம்பு மற்றும் அனிருத் நேரில் ஆஜராக வேண்டும் என்று காவல்துறை தரப்பில் இருந்து சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout