முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு பெரியார் விருது: தமிழக அரசு அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,January 13 2018]

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் பங்காற்றி வருபவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்து வரும் நிலையில் 2017ஆம் ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி தந்தை பெரியார் விருதை முன்னாள் அமைச்சரும், தற்போதைய தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதிக்கு வழங்கப்படுகிறது. தமிழக அரசு அறிவித்துள்ள விருதுகளின் பட்டியல் இதோ:

1. திருவள்ளுவர் விருது - முனைவர் கோ.பெரியண்ணன்
2. பெரியார் விருது           -  பா.வளர்மதி
3. அம்பேத்கர் விருது       - டாக்டர் சகோ.ஜார்ஜ்.கே.ஜே
4. அண்ணா விருது           - அ.சுப்ரமணியன்
5. காமராசர் விருது          - தா.ரா.தினகரன்
6. பாரதியார் விருது         - முனைவர் சு.பாலசுப்ரமணியன்
7. பாரதிதாசன் விருது     - கே.ஜீவபாரதி
8. திரு.வி.க விருது          - எழுத்தாளர் வை.பாலகுமாரன்
9. முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - முனைவர் பா.மருதநாயகம்

இந்த விருதை பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான சான்றிதழ் வழங்கப்படும். இந்த விருது வழங்கும் விழா வரும் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

More News

இனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து

உலக தமிழர்கள் அனைவரும் நாளை பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட தயாராகி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் ராக்கர்ஸ் அட்மினுக்கு விக்னேஷ்சிவன் வேண்டுகோள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் நேற்று வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் நல்ல ரிசல்ட்டை பெற்று திரையரங்குகளில் வெற்றி நடைபோடுகிறது.

முடிவுக்கு வந்தது அஞ்சலியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு

அஞ்சலி நடித்த் 'பலூன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து வந்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வைரமுத்து கருத்தை வைத்து மதக்கலவரமா? மன்சூர் அலிகான் ஆவேசம்

சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய ஒரு கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. பாரதிராஜா உள்பட ஒருசிலரும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தல அஜித்தின் தெறிக்கும் டீசர் ரிலீஸ் தேதி தெரிய வேண்டுமா?

தல அஜித்தின் 58வது படமான 'விசுவாசம்' படத்தை இயக்குனர் சிவா இயக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது என்பதும் தெரிந்ததே