முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு பெரியார் விருது: தமிழக அரசு அறிவிப்பு
- IndiaGlitz, [Saturday,January 13 2018]
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் பங்காற்றி வருபவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்து வரும் நிலையில் 2017ஆம் ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி தந்தை பெரியார் விருதை முன்னாள் அமைச்சரும், தற்போதைய தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதிக்கு வழங்கப்படுகிறது. தமிழக அரசு அறிவித்துள்ள விருதுகளின் பட்டியல் இதோ:
1. திருவள்ளுவர் விருது - முனைவர் கோ.பெரியண்ணன்
2. பெரியார் விருது - பா.வளர்மதி
3. அம்பேத்கர் விருது - டாக்டர் சகோ.ஜார்ஜ்.கே.ஜே
4. அண்ணா விருது - அ.சுப்ரமணியன்
5. காமராசர் விருது - தா.ரா.தினகரன்
6. பாரதியார் விருது - முனைவர் சு.பாலசுப்ரமணியன்
7. பாரதிதாசன் விருது - கே.ஜீவபாரதி
8. திரு.வி.க விருது - எழுத்தாளர் வை.பாலகுமாரன்
9. முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - முனைவர் பா.மருதநாயகம்
இந்த விருதை பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான சான்றிதழ் வழங்கப்படும். இந்த விருது வழங்கும் விழா வரும் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.