அமலாபால் படத்தை இஸ்ரேலின் வீதிச்சண்டையுடன் ஒப்பிட்ட ரஜினி பட இயக்குனர்

  • IndiaGlitz, [Monday,January 20 2020]

நடிகை அமலாபால் நடிப்பில் வினோத் இயக்கத்தில் ஜேக்ஸ் பிஜாய் இசையில் தயாராகியுள்ள ’அதோ அந்த பறவை போல’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

அமலாபால் இந்த படத்திற்காக ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் டூப் இன்றி நடித்ததற்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதோடு இந்த படத்திற்காக அவர் தற்காப்பு கலையை கற்ற ஆர்வத்தையும் பலர் பாராட்டி வருகின்றனர்

இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லரை ரஜினிகாந்த் நடித்த ’காலா’ மற்றும் ’கபாலி’ படத்தை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டி உள்ளார். அவர் இந்த படத்தை இஸ்ரேலின் வீதி சண்டையுடன் ஒப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இந்த படம் குறித்து கூறியதாவது:

’அதோ அந்த பறவை போல’ முன்னோட்டம் வித்யாசமாக இருந்தது. புதிய குழு. பெண்ணையும் இஸ்ரேலின் வீதிச் சண்டையையும் மையமாக வைத்து இயக்கி இருக்கும் தோழர் வினோத் அவர்களுக்கும் அமலாபால் மற்றும் படக்குழுவினர்களுக்கும் வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.

More News

அமெரிக்காவில், டிரம்ப்பை பதவியிலிருந்து நீக்க விசாரணைக்கு தயாராகும் செனட் சபை..!

அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவி நீக்க நடவடிக்கைகாக அமெரிக்க செனட் சபையினர் 100 பேர் நீதிக்குழு உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

பிரதமர் மோடியின் டுவீட்டை அப்படியே காப்பி பேஸ்ட் செய்த பிரபல நடிகை

சமீபத்தில் பழம்பெரும் பாலிவுட் நடிகை ஷபானா ஆஷ்மி அவர்கள் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. ஷபனா ஆஷ்மி விபத்தில் சிக்கியது

அட்லியுடன் இணையும் சந்தானம்: ஒரு ஆச்சரிய அறிவிப்பு

'ராஜா ராணி' என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி.

ஜார்கண்டில் பாஜக வேட்பாளராக நிற்க மறுத்ததால், விளையாட்டில் ஒதுக்கப்படுகிறாரா தோனி..?!

பிசிசிஐ ஜனவரி 16 வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலிலும் தோனி பெயர் இடம்பெறவில்லை. இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வெற்றிப்பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த சந்தானம்!

நடிகர் சந்தானம் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான வெற்றிப்படம் 'ஏ1'. இந்த படம் ரூபாய் 10 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 20 கோடி ரூபாய் வசூலித்ததாக