'மாமன்னன்' இசை வெளியீடு: 'தங்கலான்', 'சார்பாட்டா பரம்பரை 2' அப்டேட் கொடுத்த பா ரஞ்சித்..!

  • IndiaGlitz, [Friday,June 02 2023]

’மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பா. ரஞ்சித், 'தங்கலான்’, மற்றும் ‘சார்பாட்டா பரம்பரை 2’ படங்கள் குறித்த அப்டேட்டை தெரிவித்துள்ளார்

’மாமன்னன்’ இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில் இந்த விழாவில் பா ரஞ்சித் கலந்து கொண்டார். அதில் அவர் பேசிய போது ’பரியேறும் பெருமாள்’ மற்றும் ’கர்ணன்’ ஆகிய இரண்டு படங்களை அடுத்து மாரி செல்வராஜுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு மைல்கல்லாக இருக்கும். இந்த படத்திலும் அவர் ஒரு அரசியல் பேசியிருக்கிறார் என்றும் தெரிவித்தார்

மேலும் ’மாமன்னன்’ படத்தின் சில காட்சிகளை நான் பார்த்தேன், ரொம்ப அருமையாக இருந்தது, குறிப்பாக வடிவேலு அவர்கள் இதற்கு முன் யாரும் பார்த்திராத ஒரு கேரக்டரில் பார்க்கலாம்’ என்று கூறினார்

மேலும் 'தங்கலான்’, படத்தின் படப்பிடிப்பு வரும் 15ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும் இன்னும் 12 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் சியான் விக்ரம் தற்போது குணமடைந்து ஜாலியாக இருப்பதாகவும் கூறினார்,

மேலும் ‘சார்பாட்டா பரம்பரை 2’ படம் குறித்து கூறிய அவர் இந்த படத்தின் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

More News

'மாமன்னன்' இசை வெளியீட்டு விழாவில் திருமணம் குறித்து மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்..!

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் இந்த விழாவில் கலந்துகொண்ட நாயகி கீர்த்தி சுரேஷ் 'என்னை கல்யாணம் செய்து கொடுப்பதிலேயே

சினிமாவை விட்டு செல்லும் உதயநிதியை வாழ்த்தி அனுப்புகிறேன்: விஜய் ஆண்டனி..!

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும் இயக்குனரும்

எனக்கு பைத்தியமே பிடிச்சிருச்சு : கணவர் ஸ்ரீஹரியின் இறப்பு பற்றி பகிர்ந்த டிஸ்க்கோ சாந்தி

தென்னிந்திய  சினிமாவில் 1980 -களில் நடனத்தில்  கொடிகட்டி பறந்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி .

கேக் வெட்டி கொண்டாடிய ரஜினிகாந்த்-தமன்னா: மாஸ் புகைப்படங்கள் வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இது குறித்த புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் வைரல்

உடம்பு சும்மா இருந்தாலும், உள்ளே இருக்குற நரம்பு சும்மா இருக்காது: ரஜினி வெளியிட்ட யோகிபாபு படத்தின் டிரைலர்..!

பழம்பெரும் இயக்குனர் விசி குகநாதன் கதையில் உருவான 'காவி ஆவி நடுவுல தேவி' என்ற திரைப்படத்தின் டிரைலரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.