இன்னும் எத்தனை மாணவர்களை கொல்ல துணை போகப் போகிறீர்கள்? அரசுக்கு பிரபல இயக்குனர் கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
நீட் தேர்வு பயம் காரணமாக இன்று காலை மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பாக்கிய நிலையில் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி திரையுலகினர் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் சமூக கருத்துகளை ஆவேசமாக தெரிவித்துவரும் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
அரியலூர் மாணவர் விக்னேஷ் மரணமடைந்த சில நாட்களுக்குள்ளாகவே, மதுரை மாணவி ஜோதி ஶ்ரீதுர்கா நீட்தேர்வு படுகொலை செய்திருக்கிறது. நீட் தேர்வு குறித்த உறுதியற்ற நிலைப்பாடால் தமிழக அரசு இன்னும் எத்தனை மாணவர்களை கொல்ல துணைப்போக இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் மாணவி ஜோதிதுர்கா போன்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் கனவு வீணடிக்கப்படுகிறது.! திறமைக்கு மதிப்பளிக்காத அரசே உங்களின் நிவாரணமும், உங்களின் இரக்கமும் எங்களுக்கு தேவையில்லை. முதலில் மாணவர்களுக்கு சிந்தனை விடுதலையை ஏற்படுத்துங்கள்.!! என்றும் பா.ரஞ்சித் இன்னொரு டுவிட்டில் கூறியுள்ளார்.
முன்னதாக ’மூடர்கூடம்’ இயக்குனர் நவீன் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது:
இன்னும் எத்தனை உயிர்கள்?
எத்தனை கோரிக்கைகள்?
எத்தனை போராட்டங்கள்?
அரியலூர் மாணவர்விக்னேஷ் மரணமடைந்த சில நாட்களுக்குள்ளாகவே,மதுரை மாணவி ஜோதி ஶ்ரீ துர்கா #நீட்தேர்வு படுகொலை செய்திருக்கிறது.நீட் தேர்வு குறித்த உறுதியற்ற நிலைப்பாடால் தமிழக அரசு @CMOTamilNadu இன்னும் எத்தனை மாணவர்களை கொல்ல துணைப்போக இருக்கிறது? #Im_tired #BanNEET_SaveTNStudents
— pa.ranjith (@beemji) September 12, 2020
#நீட்தேர்வு #நீட்கொலை#மாணவி_ஜோதிதுர்கா போன்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் கனவு வீணடிக்கப்படுகிறது.!
— நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) September 12, 2020
திறமைக்கு மதிப்பளிக்காத அரசே
உங்களின் நிவாரணமும், உங்களின் இரக்கமும் எங்களுக்கு தேவையில்லை.
முதலில் மாணவர்களுக்கு சிந்தனை விடுதலையை ஏற்படுத்துங்கள்.!!#நீட்_தேர்வை_ரத்துசெய்@beemji pic.twitter.com/XsNDVOQohs
இன்னும் எத்தனை உயிர்கள்?
— Naveen Mohamedali (@NaveenFilmmaker) September 12, 2020
எத்தனை கோரிக்கைகள்?
எத்தனை போராட்டங்கள்?#IamSorryIamTired #BanNEET #BanNEET_SaveTNStudents pic.twitter.com/4v0YYfdXvg
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments