close
Choose your channels

பா.ரஞ்சித்தின் மல்டிஸ்டார் படத்தில் மூன்று பிரபல நடிகர்கள்!

Sunday, June 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் 'செக்க சிவந்த வானம்' உள்பட ஏற்கனவே ஒருசில மல்டிஸ்டார் படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வரும் நிலையில் தற்போது பா.ரஞ்சித் ஒரு மல்டி ஸ்டார் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

பா.ரஞ்சித் இயக்கவுள்ள மல்டி ஸ்டார் படத்தில் ஆர்யா, ராணா மற்றும் சத்யராஜ் ஆகிய மூவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் மேலும் ஒருசில பிரபலங்கள் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் தெரிகிறது.

சமீபத்தில் 'ராஜராஜா சோழன்' உள்பட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி நீதிமன்ற படியேறி வரும் பா.ரஞ்சித், 'பிர்சா முண்டா' என்ற பாலிவுட் படத்தை இயக்க திட்டமிட்டு அதற்கான ஆரம்பகட்ட பணிகளை கடந்த சில மாதங்களாக செய்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென தமிழ்ப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment