அடுத்த வாரம் 'தங்கலான்' வாரம் தான்: பா ரஞ்சித் பேட்டி..!

  • IndiaGlitz, [Friday,October 20 2023]

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிய ‘தங்கலான்’ படத்தின் அப்டேட்டுகள் அடுத்த வாரம் முதல் வெளியாகும் என்று இயக்குனர் பா ரஞ்சித் பேட்டி அளித்துள்ளார்.

விக்ரம், மாளவிகா மோகன் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தயாராகி விட்டதாகவும் அடுத்த வாரம் ட்ரைலர் உட்பட சில முக்கிய தகவல்களுடன் அப்டேட்டுகள் வரும் என்றும் இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்

இந்த வாரம் முழுவதும் ’லியோ’ படத்தின் பரபரப்பான செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த செய்திகள் முடிந்தவுடன் அடுத்த வாரம் முதல் ‘தங்கலான்’ அப்டேட்டுகள் வெளியாகும் என்பதால் அடுத்த வாரம் ‘தங்கலான்’ வாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.