அவர் கூறிய கருத்தில் எனக்கு விமர்சனம் உள்ளது: அயோத்தி சென்ற ரஜினி குறித்து ரஞ்சித்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றது ரஜினியின் விருப்பம் என்றாலும் அவர் சொன்ன கருத்தில் எனக்கு விமர்சனம் உள்ளது என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் நடித்த ’ப்ளூ ஸ்டார்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு பா ரஞ்சித் பேசியிருப்பதாவது:
இன்று மிக முக்கியமான நாள். மிகவும் தீவிரமான ஒரு கால கட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்துகொண்டிருக்கிறது. இன்னும், 5, 10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் நாம் இறக்கப் போகிறோம் என்பது நமக்குத் தெரியாது. அந்த மாதிரி ஒரு காலக்கட்டத்தில் நாம் நுழைவதற்கு முன்பு நம்மை நாமே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மூளையில் ஏற்றி வைத்திருக்கும் பிற்போக்கு தனத்தையும், மதவாதத்தையும் அழிப்பதற்கு நம்மிடம் இருக்கும் கலையை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறோம். பிற்போக்குத்தனங்களை அழிக்கும் என நம்புகிறோம். இந்தியாவை மோசமான கால கட்டத்தை நோக்கி தள்ளிவிடாமல் நிறுத்துவதற்கு நம்மால் முடிந்த வேலையை நாம் செய்ய வேண்டும்’ என்று பேசினார்.
அதன்பின் செய்தியாளர்கள் ரஜினி அயோத்தி ராமர் கோவில் சென்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த பா ரஞ்சித், ‘ரஜினிகாந்த் கோயிலுக்கு சென்றது அவருடைய விருப்பம். ஆனால், 500 ஆண்டுகள் பிரச்சினை தீர்ந்திருப்பதாகச் சொல்கிறார். அதற்கு பின்னால் இருக்கும் அரசியலை நாம் கேள்வி கேட்க வேண்டியுள்ளது. அவர் கூறியது சரியா, தவறா என்பதைத் தாண்டி அவரது கருத்தில் எனக்கு விமர்சனம் உள்ளது’ என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments