விழிப்படைவோம்! பெரியார் சிலை அவமதிப்பு குறித்து பா.ரஞ்சித்
- IndiaGlitz, [Friday,July 17 2020]
இன்று காலை கோவை மாவட்டம் சுந்தராபுரம் என்ற பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவிச்சாயம் ஊற்றி அவமதிப்பு செய்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதிமுக அமைச்சர் ஜெயகுமார், பாஜக பிரமுகர் வானதி ஸ்ரீனிவாசன் உள்பட பலர் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் அவ்வப்போது தனது டுவிட்டரில் சமூகத்தில் நடைபெறும் அவலங்கள் குறித்து குரல் கொடுத்துவரும் இயக்குனர் பா.ரஞ்சித் இதுகுறித்து தனது கருத்தை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் காவி ஊற்றி இழிவுபடுத்துவது வாடிக்கையாகி விட்டது. இந்துத்துவ பிற்போக்குத்தனத்தை எதிர்ப்போரை பொது சமூகத்திற்க்கு எதிரியாக மாற்றுதல், அழித்தொழித்தல் என தங்கள் வேலைத்திட்டத்தை மத உணர்வை தூண்டி செயல்படுத்தி கொள்கிறார்கள்! விழிப்படைவோம்.
தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் காவி ஊற்றி இழிவுபடுத்துவது வாடிக்கையாகி விட்டது. இந்துத்துவ பிற்போக்குத்தனத்தை எதிர்ப்போரை பொது சமூகத்திற்க்கு எதிரியாக மாற்றுதல், அழித்தொழித்தல் என தங்கள் வேலைத்திட்டத்தை மத உணர்வை தூண்டி செயல்படுத்திக்கொள்கிறார்கள்! விழிப்படைவோம்!
— pa.ranjith (@beemji) July 17, 2020