மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு விவகாரம்: பா.ரஞ்சித் கருத்து
- IndiaGlitz, [Wednesday,April 22 2020]
சமீபத்தில் கொரோனா பாதிப்பு அடைந்த நோயாளிகளுக்கு சிகிச்சை செய்த சென்னை மருத்துவர் சைமன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பதும், அவருடைய உடலை அடக்கம் செய்ய கூட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே.
மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தை திரையுலகினர் உள்பட பலர் கண்டித்து வரும் நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
கொரோனா தொற்றின் அச்சம் மக்களிடையே அதிமாகி கொண்டிருப்பதை, நோய்தொற்றால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததை கொண்டே புரிந்து கொள்ள முடியும். இச்சம்பவம் தன்னலமற்று உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களின் உள்ளத்தில் பெரும் மன இறுக்கத்தையும் உண்டாக்கியுள்ளது. மருத்துவர்களின் மனநிலையை புரிந்து அவர்களின் வேதனையை போக்க துணை நிற்ப்போம். இறந்தவர்களின் உடலில் இருந்து நோய் தொற்று ஏற்படாது என்ற விழிப்புணர்வை உண்டாக்குவோம்’ என்று கூறியுள்ளார்.
1/கொரோனா தொற்றின் அச்சம் மக்களிடையே அதிமாகி கொண்டிருப்பதை, நோய்தொற்றால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததை கொண்டே புரிந்து கொள்ள முடியும். இச்சம்பவம் தன்னலமற்று உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களின் உள்ளத்தில் பெரூம் மன இறுக்கத்தையும் உண்டுபன்னிருக்கிறது.
— pa.ranjith (@beemji) April 22, 2020