பா ரஞ்சித்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: மாரி செல்வராஜ் வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
பா ரஞ்சித்தின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த படம் வெற்றியடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பா ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் தயாரிப்பில் சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’ரைட்டர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படம் டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிராங்கிளின் ஜாக்கெப் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு கோவிந்து வசந்தா இசையமைத்துள்ளார். பிரதீப் காளிராஜ் ஒளிப்பதிவில் மணிகண்டன் சிவகுமார் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்புக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நீலம் புரோடக்சன் தயாரிப்பில் இருந்து வெளிவரும் மற்றொரு வெற்றி படைப்பு என்றும் பா ரஞ்சித் அண்ணா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் அன்பும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
@officialneelam தயாரிப்பிலிருந்து வெளிவரும் மற்றுமொரு வெற்றிப்படைப்பு. வாழ்த்துக்கள் @beemji அண்ணா. மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் அன்பும் https://t.co/6t0iqe4FNN
— Mari Selvaraj (@mari_selvaraj) December 3, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments