சியான் விக்ரம் பிறந்த நாள்.. வேற லெவல் 'தங்கலான்' மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பா ரஞ்சித்..!

  • IndiaGlitz, [Monday,April 17 2023]

நடிகர் சியான் விக்ரம் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவர் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்தின் வேற லெவல் மேக்கிங் வீடியோவை இயக்குனர் பா ரஞ்சித் வெளியீட்டு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சியான் விக்ரம் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரமுக்கு தனது பிறந்த நாளை தெரிவித்ததோடு ‘தங்கலான்’ படத்தின் மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் உள்ள காட்சிகளை பார்க்கும்போது படக்குழுவினர் வேற லெவலில் ரிஸ்க் எடுத்து படத்தை உருவாக்கி வருகிறார்கள் என்பது தெரிய வருகிறது. குறிப்பாக பல மணி நேரம் விக்ரமுக்கு மேக்கப் போடப்பட்டுள்ளது என்பதும், அவருடைய மேக்கப் மிரட்டும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏராளமான துணை நடிகர்களுடன் கூடிய பிரம்மாண்டமான காட்சிகள் இந்த படத்தில் உருவாகி வருகிறது என்பதும் இந்த வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. மொத்தத்தில் ‘தங்கலான்’ திரைப்படம் ரசிகர்களுக்கு இதுவரை இல்லாத அளவில் ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் என்பது இந்த வீடியோவில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது

விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டு பாடல்களின் ஒலிப்பதிவு முடிந்துவிட்டதாகவும், இதுவரை நான் முயற்சி செய்யாத தனித்துவமான ஒரு சர்வதேச தரத்தில் பாடல்களை உருவாக்கி உள்ளேன் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

More News

'கங்குவா' என்றால் என்ன அர்த்தம்.. ஃபயரான விளக்கம் அளித்த சிறுத்தை சிவா..!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வீடியோ நேற்று வெளியானது என்பதும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை

விஜய் சேதுபதி விலகிய முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படம்.. யார் நடிக்கிறார் தெரியுமா?

இலங்கை முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் முயற்சிகள் நடந்த போது அதில் முத்தையா முரளிதரன்

'நாயகன்' கமல் மகளாக நடித்த நடிகையை ஞாபகம் இருக்கிறதா? க்யூட் குடும்ப புகைப்படங்கள்..!

பிரபல இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் உருவான 'பூவிழி வாசலிலே' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கார்த்திகா. அதன் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில்

சமந்தாவை யாராலும் தடுக்க முடியாது.. சொன்ன நடிகை யார் தெரியுமா?

நடிகை சமந்தாவை யாராலும் தடுக்க முடியாது என்றும், அவர் மன வலிமை மிக்கவர் என்றும் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் புகழாரம் சூட்டியுள்ளார்.

நடிகர் வைபவ் 25வது படம்.. டைட்டிலை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்..!

நடிகர் வைபவ் திரையுலகில் 25வது படம் என்ற மைல்கல்லை எட்டிய நிலையில் இந்த படத்தின் டைட்டிலை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.