'பிக்பாஸ்' நடிகையின் படத்தை புரமோஷன் செய்த பா.ரஞ்சித்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா என்பதும் அவர் கடைசிவரை போட்டியிலிருந்து, இறுதியில் ரன்னராக வெற்றி பெற்றவர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஐஸ்வர்யா தாத்தாவுக்கு பல திரைப்படங்கள் நடிக்க வாய்ப்புகள் கிடைத்த நிலையில் அவர் முக்கிய வேடத்தில் நடித்து வந்த திரைப்படமாக ’மிளிர்’ என்ற திரைப்படம் இருந்தது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சூர்யா சூர்யதேவ் தயாரிப்பில் நாகேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா உடன் நடிகர் சரண் விசாகன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கார்த்திகேயன் ஒளிப்பதிவில், தினேஷ் இசையில் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஐஸ்வர்யா தத்தா அடையாளமே தெரியாத வகையில் ஆக்ரோஷமாக இருக்கும் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
I’m happy to share #மிளிர் #Milir interesting #MilirFirstLook
— pa.ranjith (@beemji) June 5, 2020
Producer: @SuryaSuryadevi
Dir @Nagendran0007 @Aishwaryadutta6 @ActorSharan@AmmKarthickeyan@music_Dinesh_DA@Lyricist_Vivek @muruganmantiram@veeramani_art@greysonfx @urkumaresanpro congratulations team!???????? pic.twitter.com/PCVFfmNgwi
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com