பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில், ஹீரோ குறித்த தகவல்!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் வரும் 22ஆம் தேதி அமேசானில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ரஞ்சித் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் ’நட்சத்திரம் நகர்கிறது’ என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தில் அசோக் செல்வன் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே ரஞ்சித் பாலிவுட்டில் ’பிர்சா முண்டா’ என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார் என்பதும் அந்த திரைப்படத்தை அவர் தொடரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.