பா ரஞ்சித் அடுத்த படத்தின் ஹீரோ, டைட்டில் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ மற்றும் ’காலா’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித் தற்போது ஆர்யா நடித்து வரும் ’சல்பேட்டா’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஏற்கனவே ’பரியேறும் பெருமாள்’ மற்றும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்களையும் தயாரித்துள்ள பா ரஞ்சித் தற்போது தனது உதவி இயக்குனர் சுரேஷ் மாரி என்பவர் இயக்கி வரும் படத்தை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது பா ரஞ்சித் தயாரிக்கும் மேலும் ஒரு படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பா ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு ’ரைட்டர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளிவரும் என்றும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனி நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கபட்டுள்ளது.
மேலும் இந்த படத்தை பிராங்க்ளின் ஜோசப் என்பவர் இயக்க இருப்பதாகவும் கோவிந்த் வசந்தா இசையமைக்க இருப்பதாகவும் பிரதீப் ராஜா என்பவர் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகும் மணி என்பவர் படத்தொகுப்பு செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு நாளை பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
.@thondankani 's #Writer✍ (FIR)st Look from tomorrow @officialneelam @GRfilmssg @LRCF6204 @Tisaditi @abhay_muvizz @PiiyushSingh @frankjacobbbb @doppratheep @govind_vasantha@editor_mani @kabilanchelliah@RIAZtheboss @StarviewDigital @pro_guna pic.twitter.com/KLZphamwfB
— pa.ranjith (@beemji) April 13, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com