கள்ளச்சாராய நேரத்தில் பாட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட பா ரஞ்சித்.. அடுத்த பட அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் ஒரு பக்கம் கள்ளச்சாராய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மது பாட்டிலுடன் கூடிய தனது அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா ரஞ்சித் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடித்த ’தங்கலான்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பதும் அந்த படங்கள் குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் சற்றுமுன் பா.ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ’பாட்டல் ராதா’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த படத்தை எழுதி இயக்குபவர் தினகரன் சிவலிங்கம் என்றும் ஷான் ரோல்டன் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், மாறன், ஆண்டனி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு பாட்டிலுக்குள் ராஜாக்கள் உட்காரும் நாற்காலியில் கம்பீரமாக குரு சோமசுந்தரம் உட்கார்ந்து கையில் சரக்கு வைத்திருப்பது போல் உள்ளது. மேலும் அதன் கீழே கொத்தனார் வைத்திருக்கும் கரண்டி, அடுப்புக்குள் நாய் மற்றும் ஒரு சிலேட்டில் குடும்பத்தின் ஓவியம் உள்ளது.
குடிப்பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை சிம்பாலிக்காக இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் காட்டியுள்ளதாக கருதப்படுகிறது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
It all starts with a Bottle ✨
— pa.ranjith (@beemji) June 24, 2024
Buckle up for a high like no other! It's going to be an entertaining ride!
Presenting you the first look of #BottleRadha 🍾
A film by @Dhinakaranyoji 💥💥💥I’m happy for you da❤️❤️💥
A @RSeanRoldan Musical
Starring @gurusoms @sanchana_n… pic.twitter.com/VsLJdy2cTH
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments