விக்ரமை அடுத்து பா ரஞ்சித்தின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: இணையத்தில் வைரல்

சியான் விக்ரம் நடிக்கும் 61வது திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்க உள்ளார் என்பதும் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் இந்தப் படத்தின் ஆரம்ப விழா சமீபத்தில் நடந்தது என்பதையும் பார்த்தோம். ஜிவி பிரகாஷ் இசையில் கிஷோர் ஒளிப்பதிவில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் பா ரஞ்சித்தின் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் ’பொம்மை நாயகி’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. யோகிபாபு ஒரு சிறு பெண் குழந்தையுடன் இருக்கும் இந்த போஸ்டர் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக இயக்குநர் ஷான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீமதி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கும் இந்த படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ளார் என்பதும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் தனது மகளுக்காக ஒரு தந்தையின் போராட்டமே இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது. தேனி உள்பட மலை கிராமங்களில் இந்த படத்தின் பெரும்பாலான பகுதியின் படப்பிடிப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இன்று ஆடி முதல் வெள்ளி: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எங்கே போயிருக்கார் பாருங்க!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காமாட்சி கோவிலுக்கு சென்றதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள

'தி லெஜண்ட்' படத்திற்காக சரவணன் எடுத்துள்ள புதிய முயற்சி: வீடியோ வைரல்

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ' தி லெஜண்ட்' திரைப்படம் வரும் 28ஆம்  தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது

6 ஹீரோயின்களை ஏமாற்றினாரா பிரபுதேவா? அதிர்ச்சி தகவல்

தமிழ் திரையுலகில் நடிகர், நடன இயக்குனர்,இயக்குனர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து வரும் பிரபுதேவா, 6 ஹீரோயின்களை ஏமாற்றி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்தின் ஐரோப்பா பயணத்தில் முக்கிய திருப்பம்: வைரல் புகைப்படங்கள்!

அஜித் கடந்த சில நாட்களாக ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்றும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்துவரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது என்பது தெரிந்ததே. 

மேக்கப் இல்லாத ஷிவானி நாராயணன்: எப்படி இருக்கிறார் பாருங்க!

தொலைக்காட்சி சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் என்பதும் அந்த பிரபலத்தின் அடிப்படையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மில்லியன்கணக்கான