பா ரஞ்சித்தின் அடுத்த படத்தின் வித்தியாசமான டைட்டில் இதுவா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் இணையதளங்களில் கசிந்துள்ள நிலையில் வித்தியாசமான டைட்டிலாக உள்ளது என நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா ரஞ்சித், அதன்பின்னர் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பாட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கினார். தற்போது அவர் ஜார்கண்ட் மாநிலத்தின் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா வின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் இயக்கம் மட்டுமின்றி ‘நீலம் புரடொக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, குதிரைவால், ரைட்டர் ஆகிய நான்கு படங்களை பா ரஞ்சித் தயாரித்துள்ளார். இந்த நிலையில் அவர் தயாரிக்கும் ஐந்தாவது படத்தின் டைட்டில் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்டகத்தி தினேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஊர்வசி, டிக்கிலோனா மாறன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை சுரேஷ் மாரி என்பவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ‘ஜெ.பேபி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் டைட்டில் போஸ்டர் வெளிவரும் வரை பொறுமை காப்போம்.
Coming soon ?????? pic.twitter.com/9k9DALqAdn
— pa.ranjith (@beemji) March 27, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments