பா ரஞ்சித்தின் அடுத்த படத்தின் வித்தியாசமான டைட்டில் இதுவா?

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் இணையதளங்களில் கசிந்துள்ள நிலையில் வித்தியாசமான டைட்டிலாக உள்ளது என நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா ரஞ்சித், அதன்பின்னர் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பாட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கினார். தற்போது அவர் ஜார்கண்ட் மாநிலத்தின் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா வின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இயக்கம் மட்டுமின்றி ‘நீலம் புரடொக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, குதிரைவால், ரைட்டர் ஆகிய நான்கு படங்களை பா ரஞ்சித் தயாரித்துள்ளார். இந்த நிலையில் அவர் தயாரிக்கும் ஐந்தாவது படத்தின் டைட்டில் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்டகத்தி தினேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஊர்வசி, டிக்கிலோனா மாறன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை சுரேஷ் மாரி என்பவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ‘ஜெ.பேபி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் டைட்டில் போஸ்டர் வெளிவரும் வரை பொறுமை காப்போம்.

More News

மகிழ்ச்சியாக வாழ்வதற்காக மதம் மாறினேன்: வனிதா விஜயகுமார்

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா விஜயகுமார் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக மதம் மாறி உள்ளதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விக்ரம், சிம்பு படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்: சிவகார்த்திகேயன் வழக்கு!

விக்ரம் மற்றும் சிம்பு படங்களை பிரபல தயாரிப்பாளர் விநியோகிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தனுஷ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்: ஹீரோயின் யார் தெரியுமா?

தனுஷ் இயக்கிய 'பா பாண்டி' என்ற திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான நிலையில் தற்போது தனது அடுத்த படத்தை அவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன .

மாடல் அவதாரம் எடுத்த எம்.பி… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் ஒருவர் தற்போது

அரபிக்குத்துப் பாடலுக்கு மாஸ் நடனம் ஆடிய 3 குயின் நடிகைகள்… வைரலாகும் வீடியோ!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் “பீஸ்ட்“ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.